Pages

Thursday, August 30, 2012

ஈ.எஸ்.பி...........E.S.P (Extra Sensory Perception)



அதீத உள்ளுணர்வுத் திறன், கூடுதல் புலனறிவு, என்றெல்லாம் அழைக்கப்படும் E.S.P உலகெங்கிலுமுள்ள மனிதர்கள் பலருக்கும் வியப்பைத் தரும் ஒன்று.........

பின்னர் வருவதை, அல்லது நடக்கப் போகும் ஒன்றை முன் கூட்டியே அறிவதுதான் ஈ.எஸ்.பி. எனப்படுகிறது. பொதுவாக, ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் எல்லா மனிதருக்குமே ஓரளவு இருக்கிறது. ஆனால் பலரும் அந்த ஆற்றலின் மீது கவனம் செலுத்துவதில்லை. அல்லது அந்தத் திறனை வளர்த்துக் கொள்ளுவதில்லை. அதனால் பலரும் அது பற்ற
ிய உண்மைகளை அறியாமல் உள்ளனர். உதாரணமாக திடீரென நாம் நெருங்கிய நண்பர் ஒருவரைப் பற்றி அடிக்கடி நினைப்போம். அவரைப் பார்க்க வேண்டுமென நினைப்போம். திடீரென அவர் கண் முன்னே வந்து நிற்பார். அல்லது அவரைப் பற்றிய செய்தி நமக்கு வந்து சேரும். அல்லது போன் வரலாம். இதுதான் ஈ.எஸ்.பி. என்பதன் ஒருவித எளிமையான விளக்கம். இந்த ஈ.எஸ்.பியில் பல வகைகள் உள்ளன.

பிறருடைய எண்ணங்களை, அவர்கள் மனதில் உள்ள தகவல்களைப் படிக்கும் ஆற்றல் – டெலிபதி (Telepathy) எனப்படுகிறது.

எதிர்காலத்தை அவதானித்து, மிகச் சரியாக அதை முன்கூட்டியே கூற முடிவதற்கு – Precognition என்று பெயர்.

இருந்த இடத்தில் இருந்து கொண்டே வேறு ஒரு இடத்தில் நடக்கும் விஷயங்களை சரியாகக் கணித்துக் கூறுவதற்கு – Clairvoyance என்று பெயர்.

ஒரு நபரது கடந்த காலத்தை, சம்பவங்களை, வாழ்க்கை நிகழ்ச்சிகளை நேரில் பார்த்தது போல் மிகத் துல்லியமாகக் கூறுவதற்கு Retro cognition என்று பெயர்.

ஒரு நபருக்குச் சொந்தமான பொருளை தொடுவதன் மூலமோ அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட ஏதேனும் உடைமைப் பொருள் ஒன்றைக் கொண்டு அந்த நபர் பற்றி, அவர் இருக்கும் இடம், தன்மை, அவரது செயல்பாடுகள் பற்றிக் கூறும் திறனுக்கு Psychometric என்று பெயர்.

இதில் முக்கியமான விஷயம் ஈ.எஸ்.பி என்பது அமானுஷ்ய ஆற்றலோ அல்லது ஆவிகள் போன்றவற்றின் உதவியால் செயல்படுத்தப்படுவதோ இல்லை. முழுக்க முழுக்க மூளை மற்றும் மனத்தில் செயல்பாடுகளால் ஏற்படும் அதீத திறனே ஈ.எஸ்.பி. அதே சமயம் விஞ்ஞானிகளால் இது எப்படிச் செயல்படுகிறது, ஏன் ஒரு சிலருக்கு மட்டும் இந்த ஆற்றல்கள் அதிகமாக இருக்கிறது என்பதைக் கண்டறிய முடியவில்லை. இதை அவர்கள் நம்பினாலும் விஞ்ஞானபூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் Para-Psychology மற்றும் Para Normal என்ற வகையில் இதனை உள்ளடக்கி ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

பண்டைய புராணங்களில் ஈ.எஸ்.பி பற்றிய பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன. மகாபாரதத்தில், குருஷேத்திரப் போர் நடக்கும் காலத்தில், அரண்மனையில் இருந்து கொண்டே, பார்வையற்ற மன்னன் திருதராஷ்டிரனுக்கு அந்தப் போர் களத்தில் நடக்கும் காட்சிகளை சஞ்சயன் விவரித்தது Clairvoyance எனப்படும் இந்த ஈ.எஸ்.பி. ஆற்றலைக் கொண்டுதான்.

நாஸ்ட்ரடாமஸ் எதிர்காலத்த்தில் இந்த சமயத்தில், இன்னின்ன சம்பவங்கள் நடக்கும் என்பதை கணித்துக் கூறியதும் ஒரு விதத்தில் Precognition எனப்படும் இந்த ஈ.எஸ்.பி. ஆற்றலின் உதவியோடுதான். ஒரு சில ஜோதிடர்கள் அல்லது ஆரூடம் சொல்பவர்கள், தங்களைக் காண வரும் நபரின் கடந்த காலத்தை மிகத் துல்லியமாகவும், வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் தெளிவாகவும் கூறுவது Retrocognition என்ற ஈ.எஸ்.பி. ஆற்றலால் தான்.

உலகெங்கிலும் ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் மிக்கவர் பலர் உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் முன் அவர்கள் தங்கள் ஈ.எஸ்.பி ஆற்றலை நிரூபித்தும் காட்டியுள்ளனர்.

(தொடரும்).....

Sunday, August 26, 2012

"பெர்முடா முக்கோணம்"(bermuda triangle)



அறிவியலாலும் அவிழ்க்க முடியாத முடிச்சுகளில் ஒன்று தான் பெர்முடா முக்கோணம். வடஅட்லாண்டிக் பெருங்கடலில் பெர்முடா, மியாமி, போர்டோரிகோ ஆகிய மூன்று பகுதிகளையும் இணைத்தால் ஒரு முக்கோண வடிவம் கிடைக்கும். இந்த முக்கோண கடல் பகுதியை தான் “பெர்முடா முக்கோணம்" என்கின்றனர்..

இந்த பகுதியில் கப்பல்கள் காணாமல் போவதும் விமானங்கள் மறைந்துவிடுவதும் உண்டு. விடை தெரியாத சில இயற்கை வினோதங்களில் மிக மிக முக்கியமானது “பெர்முடா முக்கோணம்".
இந்த முக்கோண
பரப்புக்குள் வந்த கப்பல்கள், விமானங்கள் பல உரிய இடத்திற்கு போய் சேரவில்லை. புறப்பட்ட இடத்திற்கும் திரும்ப வரவில்லை. இவை அந்த முக்கோண பரப்புக்குள்ளேயே மாயமாக மறைந்து விடும்.ஏன் இந்த கப்பல்கள் இவ்வாறு காணமால் போகின்றன என்பதை ஆராய்வதற்காக 40 கப்பல்கள், 20 அதிநவீன விமானங்கள் சென்றன. ஆனால், அவற்றையும் காணவில்லை. 1872-ல் அந்த பகுதிக்குள் அப்பாவியாக தலை நீட்டிய மேரி செலஸ்டின் என்ற கப்பல்தான் முதன்முதலாக மாயமானது. தொடர்ந்து “மெடர்", “சைக்கேளாப்ஸ், கரோல்ஏடீரிஸ், கன்னிமரா போன்ற பிரமாண்ட கப்பல்களும், பிளைட் 19, ஸ்டார் டைகர் போன்ற போர் விமானங்களும் இந்த கடல் எல்லையின் மேல் மிதந்த மற்றும் பறந்த சுவடுகளே இல்லாமல் மாயமாகி விட்டன. இதனுள் பயணம் செய்த ஆயிரக்கணக்கான மக்களும் சுவடுகளே இல்லாமல் மாயமாகி விட்டன..

நடந்து என்ன? என்ற ஆராய்ச்சியில் நிபுணர்கள் களத்தில் குதித்தனர். வாலண்டைன் என்ற கடல் ஆராய்ச்சியாளர் கப்பல்கள் எங்கும் போகவில்லை. அவை எல்லாமே அங்குதான் வேறொரு பரிணாமத்தில் நிற்கின்றன என்று குழம்பினார். அமெரிக்கா விஞ்ஞானிகள் முக்கோண ஏரியாவுக்குள் கிடப்பொருட்கள் சின்னச்சின்ன அணுக்காளாக உடைந்து விடுவதால் பொருட்கள் மாயமாகி விடுகின்றன என்று கூறினார்கள்! ஏலியன்கள் (வேற்று கிரக மனிதர்கள்!) தாக்குதல், மிக அதிகமான புவியீர்ப்பு விசை, கடலின் நீரோட்டத்தில் இருக்கும் மின்னோட்டம் என்று ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னார்கள். ஆனாலும் பெர்முடா முடிச்சு அவிழ்ந்தபாடில்லை.

பெர்முடா முக்கோணத்திற்கு விடை கிடைக்காத நிலையில் அடுத்து பூதமாக ஜப்பானின் தென்கிழக்கு கடற்கரையில் செல்லும் கப்பல்கள் இப்போது காணமால் போக ஆரம்பத்திருக்கின்றன. ஜப்பான் விஞ்ஞானிகளாலும் இதனை கண்டுப் பிடிக்க முடியவில்லை. ஆனால், இந்த மர்மான பகுதிக்கு “டிராகன் டிரையாங்கிள்" என்று பெயரிட்டு கவலையோடு ஆராய்ந்து வருகின்றனர். எப்போதும் இந்த இரண்டு முக்கோண மர்மங்களுக்கும் விடை கிடைக்கும் என்பதுதான் புதிராகவே உள்ளது.

Thursday, August 9, 2012

லண்டன் ஒலிம்பிக் 2012


லண்டன் ஒலிம்பிக் 2012(ஜூலை 27...ஆகஸ்டு 12)


மனித இனம் ஒரு விதையிலிருந்து முலை விட்டிருந்தாலும் நாடு,மொழி,மதம் என பல பிரிவுகளாகத்தானே இருக்கிறது. இந்தப் பிரிவுகளை மறந்து ஒன்றிணைக்கும் கருவியாக இருப்பது விளையாட்டு.

பல்வேறு நாடுகளுக்குள் ஒவ்வ
ொரு விளையாட்டுக்கும் ஒரு குழு இருந்தாலும் ஏறத்தாழ எல்லா நாடுகளும் பங்கேற்கும் உலகளாவிய விளையாட்டு விழா ஒலிம்பிக் மட்டும்தான்.

கி.மு.776 ஆம் ஆண்டு பண்டைய கிரேக்க நாட்டில் தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள் இன்று உலகை இணைக்கும் விளையாட்டாக உலக மக்களால் கொண்டாடப்படுகிறது.

5 வளையங்கள் ஒன்றுக்குள் ஒன்றாக இணைந்திருப்பது ஒலிம்பிக்கின் சின்னம்.5 வளையங்கள் 5 கண்டங்களைக் குறிப்பதாகும்.

இந்த ஆண்டு நடைபெறப்போவது 30 ஆவது ஒலிம்பியாட் ஒலிம்பிக் போட்டி என்று அழைக்கப்படுகிறது.இங்கிலாந்து நாட்டின் தலைநகரம் லண்டன் மாநகரில்,இந்த ஜூலை மாத 27 ஆம் நாள் தொடங்கி ஆகஸ்டு 12 ஆம் நாளன்று முடிகிறது.

இதற்கு முன் இதே லண்டன் மாநகரில் 1908 மற்றும் 1948 ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளன.இம்முறை நடைபெறுவது மூன்றாம் முறையாகும்.

இந்தத் தலைமுறைக்கு ஊக்கம் அளித்தல் என்ற முழக்கத்தோடு நடக்கவுள்ள இப்போட்டி களில் 203 நாடுகள் பங்கேற்கின்றன. இந்நாடுகளில் இருந்து தோராயமாக 10,500 விளையாட்டு வீரர்கள் தங்களது திறமையைக் காட்ட இருக்கிறார்கள்.


வில்வித்தை, ஓட்டப்பந்தயம், பூப்பந்து, கூடைப்பந்து, கடற்கரைக் கைப்பந்து, குத்துச்சண்டை, படகுஓட்டுதல், சைக்கிள்பந்தயம், நீச்சல், குதிரைஓட்டுதல், கத்திச்சண்டை, கால்பந்து, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, ஹாக்கி, ஜூடோ உள்ளிட்ட 36 விளையாட்டுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளது.


ஒலிம்பிக் என்றவுடனே எல்லோர் நினைவுக்கும் வருவது ஒலிம்பிக் சுடர்தான். மே மாத 19 ஆம் நாள் இங்கிலாந்தின் செனென் என்ற நகரிலிருந்து தொடங்கி விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவராக ஏந்திய படி ஒலிம்பிக் சுடர் லண்டனை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

ஏறத்தாழ 8 ஆயிரம் வீரர்களின் கைகளில் மாறி மாறி இந்தச் சுடர் சுமார் 1,000 நகரங்கள் மற்றும் இயற்கை அழகு கொஞ்சும் சிற்றூர்கள் வழியாக ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் மைதானத்தை ஜூலை 27 அன்று வந்தடைய உள்ளது.



இந்த முறை ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தை இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்து அசத்திக் கொண்டிருக்கிறார்கள்.நீங்கள் இணையதளத்தில்http://www.london2012.com/torch-relay/video/live.html என்ற முகவரியில் இப்பொழுதுகூடப் பார்க்கலாம். எந்த ஊரில் சுடர் வந்துகொண்டிருக் கிறது.

அதனை யார் ஏந்தி வருகிறார்கள் என்பதை அறியமுடியும். இங்கிலாந்து மக்கள் சிறுவர்,சிறுமியர் உள்பட சாலையின் இருபுறமும் காத்திருந்து, ஒலிம்பிக் சுடர் ஏந்தி வரும் வீரருக்கு வாழ்த்துத் தெரிவித்து வரவேற்கிறார்கள்.

ஒலிம்பிக் போட்டியைக் காண வரும் உலக மக்களை வரவேற்கும் பாடல் ஒன்றைக் காட்சிப்படுத்தி காணொளியாக வெளியிட்டுள்ளார்கள். இதில் ஒரு சிறப்பு என்ன தெரியுமா? பாடலின் தொடக்கத்திலேயே ஒரு தமிழ்ச் சிறுவன் வணக்கம் என்று துள்ளிக்குதித்துக் கூறுகிறான்.அவனைத்தொடர்ந்து பல்வேறு மொழிச் சிறுவர்கள் தத்தம் தாய் மொழிகளில் வணக்கம் கூறுகிறார்கள்.

லண்டனில் உள்ள ஸ்டார்ட்போர்டில் ஒலிம்பிக் விளையாட்டு அரங்கம் ரூ3,400 கோடி செலவில் 2007 ஆம் ஆண்டு கட்டத்தொடங்கி 2011 ஆண்டில் திறக்கப்பட்டுள்ளது.

இதில் 80 ஆயிரம் பேர்வரை ஒரே நேரத்தில் அமர்ந்து போட்டிகளை ரசிக்கலாம்.இநத அரங்கம் முழுவதும் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருள்களால் ஆனது.

லண்டன் இப்போதே களைகட்டிவிட்டதாம். நம்மால் நேரடியாக லண்டனுக்கு சென்று பார்க்கமுடியவில்லையென்றாலும் இணையத்தின் வாயிலாகவும்.தொலைக்காட்சி வாயிலாகவும் நேரலையில் பார்த்து ரசிக்கலாமே.

Tuesday, August 7, 2012

பத்துமலைக் குகை முருகன் கோயில்


(( வேல் தாங்கிய கரமும், புன்னகை பொழியும் விழிகளும் கொண்டு 147 அடி உயரத்துடன் கம்பீரமாகக் காட்சிதரும் இந்த முருகன் சிலைதான் உலகின் மிகப்பெரிய முருகன் சிலை ))

மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் (இந்துக்கள்
) மட்டுமின்றி சீனர்களும் வந்து வழிபடக்கூடிய கோயில்களில் ஒன்று பத்துமலைக் குகை முருகன் கோயில். இந்தக் கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை அடுத்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இங்குள்ள முருகப் பெருமான் சுப்பிரமணிய சுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

((இந்த கோயில் வரலாறு))
மலேசியாவின் பத்துமலையிலுள்ள சிறிய குகையில் வேல்மாதிரி உருவம் கற்பாறையில் தெரிவதைக் கண்ட ஒரு தமிழ்ப்பக்தர் ஒரு மூங்கிலை நிறுவி அதை வேலாகக் கருதி வழிபட்டு வந்தார். பிறகு உலோகத்திலான வேல் நிறுவப்பட்டு முருகப் பெருமானுக்கு ஆலயம் அமைக்கப்பட்டது என்கிறார்கள்.இந்த பத்துமலையில் இரு குகைகள் உள்ளது. ஒன்று மிக ஆழமாகச் செல்வது, மிகவும் இருண்டது. மற்றொரு குகையில்தான் முருகன் கோயில் கொண்டிருக்கிறார்.

இந்த பத்துமலைக் குகை முருகன் கோயில் 1891ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டிருக்கிறது. அப்போது இந்த முருகனைத் தரிசிக்க கரடுமுரடான பாதையில் செல்ல வேண்டியிருந்தது. அதன் பின்பு 1938 ஆம் ஆண்டில் இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல 272 படிக்கட்டுகளைக் கொண்ட மூன்று நடைபாதைகள் அமைக்கப்பட்டது. இது தவிர தனியே இரயில் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழிகளைப் பயன்படுத்தி தரையிலிருந்து 400 அடி உயரத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று சுப்பிரமணிய சுவாமியான முருகப் பெருமானைத் தரிசித்து வரலாம்.

((மிகப் பெரிய முருகன் சிலை))
தற்போது இந்தக் கோயிலுக்குச் செல்லும் பாதைகளுக்கு முன்பாக, அதாவது நுழைவு வாயிலின் அருகில் தங்கம் போல் தகதகவென மின்னும்படியாக வர்ணம் பூசப்பட்ட மிகப் பெரிய முருகன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய வேலை வலது கையில் தாங்கி நிற்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையின் உயரம் 42.7 மீட்டர், அதாவது 140.09 அடி. இந்த சிலை அமைக்க 2003 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட பணி 2006 ஆம் ஆண்டில்தான் நிறைவு பெற்றது. இந்த சிலை அமைக்க 2006 ஆம் ஆண்டில் இந்திய மதிப்பில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவாகி இருக்கிறது. இந்த சிலை அமைப்பிற்கான கட்டுமானப் பொருட்கள் அதிகமாக பக்கத்து நாடான தாய்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கிறது. உலகின் மிகப்பெரிய முருகன் சிலையாக அமைக்கப்பட்ட பின்பு இந்த பத்துமலைக் குகை முருகன் கோயிலுக்கு வருபவர்கள் எண்ணிக்கையுடன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

((சிறப்பு விழா))
இங்கு வருடந்தோறும் தை மாதம் வரும் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் தைப்பூச விழாவில் இந்துக்கள் தவிர சீனர்கள் மற்றும் வேறு சிலரும் இங்குள்ள புனித ஆற்றில் நீராடிவிட்டு, முருகன் கோயில்களில் நேர்த்திக் கடன்களாகச் செய்யப்படும் அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற பலவிதமான நேர்த்திக் கடன்கள் இங்கும் இருக்கிறது.
ஆனால் இங்கு தமிழர்களைத் தவிர சீனர்கள் மற்றும் பிற மதத்தைச் சார்ந்தவர்களும் முருகனுக்கு வேண்டிக் கொள்வதும் நேர்த்திக்கடன் செலுத்துவதும் ஆச்சர்யமான ஒன்றாகும்.