Pages

Sunday, October 21, 2012

சிவாஜி கணேசனுக்கு பிரியாவிடை கூறல்





ஒரு பண்பாட்டாய்வியற் குறிப்பு



-கார்த்திகேசு சிவத்தம்பி -


சிவாஜிகணேசன் மறைந்து விட்டார் என்ற செய்தி தொலைக்காட்சி வழியாக வந்தபொழுது (21.07.2001) அது தமிழகத்தின் கடந்த மாத காலத்தின் அசாதாரண நிகழ்வுகள் பற்றிய நினைப்புகளுக்குள் அமிழ்ந்து விடும் போலவே இருந்தது.


ஆனால், வந்த நிகழ்ச்சிகள் அப்படி அமையவில்லை. மரணம் இயற்கை மரணம் என்றாலும், இழப்பு திடீரென வந்தது போலவும், அந்த இழப்பு சின்னதொன்றல்ல, மிகப் பெரியது, முழுத் தமிழகம் தழுவியது என்ற தொனியில் ஊடகங்கள் எடுத்துரைக்கத் தொடங்க அந்த எடுத்துரைப்பு தமிழுணர்வில் படியத் தொடங்க, அந்த மனிதன் மறைவுக்குள் தமிழ்ப் பண்பாட்டின் 'இனங்காணல்கள்' சில தொக்கி நிற்கின்றன என்பது புரியத் தொடங்கியது.


அரசியல் தன்னை ஒதுக்கியது கண்டு ஒதுங்கிப் போய் தன் நடிப்பும் தானும் என்றிருந்த சிவாஜிகணேசனுக்கு இறுதி மரியாதையாக வீரர்களுக்கு வழங்கப்படும் இறுதி கெளரவம் (துவக்குவேட்டு மரியாதை, 'லாஸ்ற்போஸற்' இசைப்பு) வழங்கப்பட்டது. சோகம் தமிழகத்தையும் தமிழ் பேசும் உலகத்தையும் தாண்டியது. அனைத்திந்திய சோகம் ஆயிற்று.



சென்னையில் நடந்த இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாத வெளிமாவட்டத்தினர் தங்கள் தங்கள் மாவட்ட நகரங்களில் இறுதிமரியாதைச் சடங்குகளை மீளுருப்படுத்திக் கொண்டாடினர். பெண்கள் அழுதனர். ஆண்கள் மொட்டை அடித்தனர்.


உண்மையான ஆச்சரியம் என்னவென்றால் இந்த உணர்வு வெளிப்பாடுகள், போலியானவையாக இருக்கவில்லை. சினிமாத்தனம் என்று சொல்வோமே அந்தப் பண்பினவாக இருக்கவில்லை.


இந்த 'நிகழ்ச்சி' (நிகழ்வு அல்ல) தமிழ்நாட்டின் பண்பாட்டுச் சமூகவியலில் ஈடுபாடு கொண்டுள்ளவர்கள் ஆய்வுக்கான ஒன்றாகும்.


அரசியற் பலமும், சமூக அதிகாரமும் இல்லாதிருந்த சிவாஜிகணேசனுக்கு இத்தகைய நெஞ்சுருக்கும் இறுதி மரியாதை ஏன் கிடைத்தது என்பது ஒரு முக்கியமான வினாவாகும்.


அதற்கான விடை காணும் பணியினை மேற்கொள்வதற்கு முதல் இந்த நிலைமையை உருவாக்கியது ஊடகத் தொழிற்பாடு தான் என்பதை மறுக்கமுடியாது. தொலைக்காட்சி அலைவழிகளும் வானொலிச் சேவைகளும் சிவாஜிகணேசன் எதனைச் 'சுட்டி' நின்றார் என்பதை மீளமீளச் சொல்லின. இவையாவற்றையும் தொகுத்துக் கூறுவது போல் அமைந்தது, சன் தொலைக்காட்சியினர் அளித்த ஒரு ஒன்றரை நிமிட நேர சிவாஜித் தொகுப்பு. சிவாஜி நடித்த பிரதான பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் ஒன்று மாறி ஒன்றாக நம் கண்முன்னேயோட விட்டனர்.


அப்பொழுது தான் அந்த உண்மை பளிச்சிட்டது.


தமிழகத்திலும், தமிழ் பேசும் நாடுகளிலும், தமிழுணர்வு, தமிழ் பாரம்பரியம் பற்றிய சிரத்தை சமூக அரசியற் பிரக்ஞையில் முக்கிய இடம் வகித்த இருபதாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் தமிழர் தொன்மைகளிலும், வரலாற்றிலும் முக்கிய இடம் பெறும் பலரை 'மீள் உருவப்படுத்தியவர்' சிவாஜிகணேசனே.


காப்பிய பாத்திரங்கள் - கர்ணன், பரதன்; சமய பாத்திரங்கள் - அப்பர்; அரசியற் பாத்திரங்கள் - இராஜராஜன், கட்டபொம்மன், வ.உ. சிதம்பரனார்.


சிவாஜியின் ஆளுமைக் கூடாகவே நாம் இந்தப் பாத்திரங்களைக் கண்டோம். அவர்களை மனிதர்களாகச் சந்தித்தோம்.


தமிழ்ப் பண்பாட்டு உணர்வு விருத்தியில் இந்த 'மீள் உருவாக்கம்' மிகமிக முக்கியமாக அமைந்தது. இந்த உருவாக்கங்களுக்கான அரசியல் இலாபத்தைப் பெறும் ஆற்றல் விழுப்புரம் சின்னையா கணேசனிடத் திலிருக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், அந்த நடிகன் மூலமாகவே நாம் தமிழனின் அசாதாரணத் திறன்களைக் கற்பனை செய்தோம், கண்முன் நிறுத்தினோம்.


அந்த வகையில் சிவாஜி தமிழ்ப் பண்பாட்டின் 'உருவத் திருமேனிகளில்' ஒன்றாகிறார்.


சிவாஜி பற்றிய ஊடக மீள நோக்குகள் தமிழ் சினிமா மூலம் நாம் பெற்றுக் கொண்ட 'உணர்வு அகற்சி'களை காட்சிப்படுத்திய - காணபியப்படுத்திய கலைஞனை, அவன் திறனை முதனிலைப்படுத்தின.


அந்த உணர்வின் படிப்படியான ஆழப்பாடுதான் சிவாஜியின் செயற்பாடு மூலம் நாம் எவ்வகை உருவாக்கங்களைப் பெற்றோம் என்பதை வெளிப்படுத்தத் தொடங்கிற்று.


சிவாஜியின் பாத்திரங்கள் பற்றிய சிந்தனை சமகாலத் தமிழ்ப் பண்பாட்டின், அந்த பண்பாட்டின் வாழ்வியலில், ஆள்நிலை உறவுகளில், சமூக அலகு உறவுகளில், குறிப்பாக குடும்ப உறவுகளில் எவையெவை மோதுகை அம்சங்களாக அமைகின்றன என்பது பற்றிய உணர்வை வலுப்படுத்தும்.


நாடகத்தின் - அரங்கின் - பிரதான பயன்பாடுகளில் ஒன்று மனிதர்களை அவர்களின் மோதுகை நிலையிலே காட்டுவது தான். இது நாடகம் (அரங்கு) பற்றிய உலகப் பொதுவான விதி. அரங்கின் விஸ்தரிப்பாக அமைந்த சினிமாவும் இந்த மோதுகைகளை மிகச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது.


தமிழ் நிலையில் இந்த மோதுகைகளை சிவாஜிகணேசனைப் போன்று எவரும் சித்தரிக்கவில்லை. பாத்திரத் தொகையிலும், சித்தரிப்பு ஆழத்திலும் சிவாஜியின் சாதனை மிகப் பெரியது.


மிக மேலோட்டமாகப் பார்த்தாலே இந்த உண்மை புலனாகும். பாசமலர், படிக்காத மேதை, பாகப்பிரிவினை, மங்கையர் திலகம், தங்கப்பதக்கம், வசந்தமாளிகை, முதல்மரியாதை, தேவர் மகன் முதலிய திரைப்படங்களில் பிரதான கதாபாத்திரங்களின் (சிவாஜி சித்தரித்தவை) மோதுகை நிலைகளைப் பார்த்தால் இந்த உண்மை நமக்கு புலப்படும். இந்த அம்சத்தைப் பற்றி சற்று உன்னிப்பாக ஆராய முனையும் பொழுதுதான், சிவாஜியின் நடிப்பு வரலாற்றின் ஒரு முக்கிய உண்மை தெரியவரும். சிவாஜி சித்தரித்த பாத்திரங்கள் பெரும்பாலும் (ஏறத்தாழ எல்லாமே) இந்த மோதுகைகளின் 'பாடு'களை தாங்குகின்றனவாக - துன்பத்தையேற்றுக் கொள்கின்றனவாக அமைந்தன என்பது தெரியும்.


சிவாஜிகணேசன் பற்றிய நினைவுகள் நமக்கு, நமது பண்பாட்டு வட்டத்து வாழ்வியலின் 'மனிதத்துவப் பாடுகளை', 'மனித நிலை சோகங்களை' எடுத்துக் காட்டுகின்றனவாக அமையும்.


சிவாஜிகணேசனுக்குள் இருந்த நடிப்புத் திறன் பிறர் இன்ப, துன்பங்களை தன் உணர்வு நிலைக்குள் உள்வாங்கிச் சித்தரிப்பவன் - இந்த மனித மோதுகைச் சித்தரிப்புக்கான தேடலை ஊக்குவித்தது.


'நடிகனுக்கான சவால்' என்பது இந்தச் சித்தரிப்புக்குள் தான். தனது இந்தப் பணி நன்கு நிறைவேறுவதற்கு அந்த நடிகரோடு 'ஊடாடும்' மற்றைய பாத்திரம் முக்கியமாகும். இதனால், சிவாஜியோடு நடிக்கும் நடிகையர், துணைப் பாத்திரங்கள் மிக முக்கியமாகினர். தான் மதித்த நடிகையர் என பானுமதி, பத்மினி, சாவித்திரியின் பெயர்களை சிவாஜிகணேசன் எடுத்துக் கூறியுள்ளார். (இலங்கை வானொலி 22.07.2001 அன்று இ.தயானந்தா அளித்த நினைவு நிகழ்ச்சி) சிவாஜிகணேசன் 'சுட்டி'நிற்கும் பண்பாட்டுத் தொழிற்பாடுகளைப பற்றி ஆராயும் பொழுது தான் சிவாஜிகணேசனின் சினிமா வருகையும், அதன் பின்புலமும் உற்றுநோக்கப்பட வேண்டியவையாகின்றன.


தமிழ்த் திரையுலகத்தின் 'அமர' கதாநாயகன் சிவாஜி ஒருவர் தான் என்று கூறவே முடியாது. அவர் காலத்து வாழ்ந்த மதனபள்ளி கோபால் இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) முக்கியமானவர். எம்ஜிஆர் தமிழ் சினிமாவை பயன்படுத்தியது போலச் சிவாஜியால் பயன்படுத்த முடியவில்லை. வளப்படுத்தியதுடன நின்று விடவேண்டிய நிலைமை ஏற்பட்டது.


இங்கு முக்கியமாக பார்க்க வேண்டுவது, சிவாஜியின் சமகாலத்தவர்களிலும் பார்க்க, சிவாஜியின் வருகைக்கு முன்னர் இருந்தவர்களே.


தியாகராஜ பாகவதருக்குச் சிவாஜியை விட கவர்ச்சி இருந்தது. கே.ஆர். ராமசாமி 'வேலைக்காரி' மூலம் மிகப் பெரிய புகழை ஈட்டியிருந்தார். சிவாஜிக்கு முன்னர் வந்தவர்களுக்கும் சிவாஜிக்குமிருந்த முக்கிய வேறுபாடு, அவர்கள் பிரதானமாக பாடகர்களே (பாடகர்கள் அல்லாதவர்கள் பிரசித்தமடைவது 1950 களின் பின்னரே - எம்ஜிஆர், ஜெமினிகணேசன் முதலியோர்) சிவாஜி உச்சரிப்புச் செம்மையையே தனது பிரதான ஆஸ்தியாகக் கொண்டிருந்தார்.


சிவாஜியின் நடிப்பு அங்க அசைவுகளில் மாத்திரம் நம்பியிருக்கவில்லை. அது 'சொற் சீரமை'யிலும் தங்கியிருந்தது.


இந்தச் சொற் சீரமை ஓர் அரசியல் பின்புலத்தோடு வந்தது. அண்ணாதுரை, கருணாநிதி தமிழ்நாட்டின் அரசியல் மேடையையும், அரங்கையும், சினிமாவையும், தமது சொற்பொழிவு முறையாலும், எழுத்து முறையாலும் மாற்றிய காலம் அது. அரங்கில் பாட்டுப் போய் வசனம் முக்கியமான காலம். கதையிலும் பார்க்க வசனத்துக்கு முக்கியத்துவம் வரத்தொடங்கிய காலம்.


சினிமாவுக்குள் இந்தப் போக்கை ஸ்திரப்படுத்திய பாரசக்தி மூலம் சிவாஜிகணேசன் அறிமுகமானார். தமிழ்ச் சினிமாவில் நடிப்பு, இப்படத்துடன் ஒரு புதிய பரிமாணத்தை பெறுகின்றனது.


சிவாஜிகணேசனின் இந்த வருகை இவரை மற்றச் சினிமா நாயகர்களிலிருந்து வேறுபடுத்துகின்றது.


தமிழ்ச் சினிமாவுக்கான நடிப்புக் கலைஞர் வருகை ஸ்பெர்ல் நாடக மரபு வழியாகவே நிகழ்ந்தது. இதனால், ஆரம்ப காலத் தமிழ்ச் சினிமா அமைப்பிலும், எடுத்துரைப்பிலும் அந்த நாடக அரங்கின் இயல்புகளையே கொண்டிருந்தது.


சிவாஜிகணேசனின் நடிப்பு முறைமை இந்திய நாடக மரபின் 'நாட்டிய தர்ம'முறை வழியாக வருவது (இது பற்றி மூன்றாவது மனிதன் ஜூலை இதழில் வந்த எனது கட்டுரையைப் பார்க்கவும்) சிவாஜிகணேசன் 'நாடக வழக்கு'க்கான ஆற்றுகையை தெருக்கூத்து மரபுக்குரிய 'அகல்வீச்சு' ஆங்கில வழியாகச் செய்தார்.


அப்படித் தொடங்கியவர் பின்னர் படிப்படியாக சினிமா என்ற ஊடகத்தின் தனித்துவமான 'காமரா வழிப்பார்வை எடுத்துரைப்பு' என்ற அம்சத்தினால் உள்வாங்கப்பட்டு அதற்குரிய நடிப்பிலே கவனம் செலுத்தத் தொடங்குகிறார்.


நடிகர் முதன்மைக்குப் பழக்கப்பட்டுப் போன தமிழ் சினிமா படிப்படியாக 'டைரக்டர் முதன்மை'க்கு வரத்தொடங்கியது. இந்த மாற்றத்தில் பாலச்சந்தர் பெயர் பெரிதும் அடிபட்டாலும் உண்மையில் கட்புலநிலை, நின்று நோக்கும் பொழுது தமிழ்ச் சினிமாவின் தமிழ் மண்வாசனை பாரதிராஜாவுடனேயே முனைப்புப் பெறுகின்றது.


பாலச்சந்தர், பாரதிராஜா வருகைக்கு முன்னர் எம்ஜிஆர், சிவாஜி 'கோலோச்சி' நின்ற காலத்தில் படப்பிடிப்பின் பொழுது கமராவின் அசைவியக்கத்தையும், கோணங்களையும் இந்தப் பெரும் நடிகர்களே தீர்மானித்தார்களாம். (இது பற்றி சத்யஜித்ரே கூட ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்) அந்த அமைப்பு 'மேடைத்தன்மை' யானதாக விருந்தது.


நெறியாளர்கள் முக்கியமாகத் தொடங்க சிவாஜியின் நடிப்பில் புதிய ஒரு விகசிப்பு ஏற்படுகின்றது. 'முதல் மரியாதை' சிவாஜியின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.


நாடக மரபின் சிசுவாக இருந்த சிவாஜிகணேசன், சினிமாவுக்கேற்ற நடிப்பின் விற்பன்னராகினார். சிவாஜியின் சினிமா வாழ்க்கை தமிழ்ச் சினிமாவின் இந்த வரலாற்றுக் கட்டத்தை எடுத்துக் காட்டுகின்றது.


சினிமா படிமங்களின் கலை - அசையும் படிமங்களின் கலை. அதனால்தான் அதை 'மோர்ன் பிக்சர்' (அசையும் படம்) என்பர்.


சமகால ஊடக உலகின் படிமத் தயாரிப்பில் சினிமாவுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. உலக நிலையில் தொழிற்பட்ட இந்த உண்மை தமிழ்ப் பண்பாட்டினுள்ளும், தமிழ்ச் சினிமாவின் ஊடாகத் தொழிற்படத் தொடங்கியது.


பணபாட்டுப் பிரக்ஞை பிரதானப்படத்தொடங்கிய சமூக அரசியற் சூழலில் அதற்கான ஆள்நிலைப் படிமங்களும் தோன்றின. அந்த நடைமுறையில் தனது சித்தரிப்பு திறனாலும், பல்வேறு பாத்திரத் தேர்வினாலும், நமது பண்பாட்டு வாழ்வியலின் ஒரு 'உருவத்திருமேனி'யாக சிவாஜிகணேசன் என்ற வி.சி. கணேசன் திகழ்ந்தார்.


அவர் மறைவுதான் அவரின் பாரிய படிம வாக்க முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்திற்று.


தமிழ்ப் பண்பாட்டில் நாடக ஆற்றுகையாளர்களை விதந்து கூறும் பண்பு நவீன காலத்திலேயே ஆரம்பிக்கின்றது. இவர்களின் பங்களிப்பு தமிழ்ப் பண்பாட்டின் நவீன கால இயக்கத்துக்கு முக்கியமாகிற்று. என்.எஸ். கிருஷ்ணன் எம்.ஜி. இராமச்சந்திரன் என வரும் அப்பட்டியலில் சிவாஜிகணேசனுக்கு நிரந்தரமான இடமுண்டு.


நன்றி:தினகுரல் 29.07.2001.

Tuesday, October 16, 2012

''எங்களை எல்லாம் பார்த்தவுடன் பிடிக்காது பார்க்க பார்க்க தான் பிடிக்கும்''


விடிந்தும்
விழிக்காதவன் !


விழித்தாலும்
பல்விலக்காதவன் !


பல்விலக்கினாலும்
குளிக்காதவன் !


குளித்தாலும்
சாப்பிடாதவன் !


இப்படி பல பொய்களை
அவ்வப்போது சொல்பவன் !


பல பெண்களை தூரத்தில்
இருந்து ரசிப்பவன் !


சிலர் அருகில் இருந்தால்
மூச்சு தினருபவன் !


பெருமை,
பொறாமை,
கோபம்,
புகழ்,
பதவி,
இவைகள் இல்லாமல்
அமைதியாய்
வாழ நினைப்பவன் !


சில நேரங்களில்
இவைகளால்
அமைதி இல்லாமல்
ஆறுதல் தேடுபவன் !


சொந்த பந்தங்களை
விரும்புபவன் !
அவர்களின் மனக்கணக்கு
புரியாமல் கலங்குபவன் !


பாடல்களை பாடத் தெரியாதவன்,
ஆனால் அதை எப்போதும்
கேட்டுக்கொண்டே இருப்பவன் !


வாழ்க்கையில்
எப்பொழுதும்
எதையாவது
தேடிக்கொண்டே இருக்க வேண்டும்
என்று ஆசை !
ஆனால் தொலைத்ததை
தேட மறுப்பவன் !


பணத்தை பத்தோடு பதினொன்றாய்
கருதுபவன் !
குணத்தை பத்தில் ஒன்றாய்
போற்றுபவன் !


கணக்கு போட்டு செலவு செய்ய
விரும்பாதவன் !
அப்படி செய்பவர்களை
நெஞ்சில் வஞ்சிக்கொண்டு
பல்லை இழிதுக்கொண்டு
பாராட்டுபவன் !


தற்பெருமையை சொல்ல
விரும்பாதவன் !
சுயமரியாதைக்காக சொல்லிய பின்
என்னை கண்டிப்பவன் !


காகிதத்தில் வரையத் தெரியாதவன் !
கணிப்பொறியில்
வண்ணம்
தீட்டுபவன் !


முக்கியமாக என்னவளுக்காக
என்றிருந்தோ காத்திருப்பவன் !
என்றும் காத்திருப்பவன் !


பலருக்கு நண்பன்,
சிலருக்கு நெருங்கிய நண்பன்,
உங்களுக்கு ?


Tuesday, October 9, 2012

இ மெயிலை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும் ?



இ மெயிலை கண்டுபிடித்தவர் (உருவாக்கியவர்) ஒரு தமிழர் V.A. Shiva Ayyadurai,Inven tor of EMAIL:
இன்றைக்கு இமெயில் என்ற வசதி இல்லாத வாழ்க்கையை கற்ப னைகூடசெய்து பார்க்க முடியவில் லை அல்லவா…
அந்த வசதியை அறிமுகப்படுத்தி ய வர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக் கும்?ஆம்! அதுதான் உண்மை. இன் று
உலகையே ஒருவலைக்குள் இ ணைத்த பெருமைக்குரிய இ மெயி ல் வசதியை நம்மஊர் தமிழர் ஒரு வர்தான் கண்டு பிடித்தார். அதற்கா ன காப்புரி மையையும் பெற்றுள்ளார்.
அவர் பெயர் வி ஏ சிவா அய்யாத்துரை. இன்றைக்கு முப்பதுவயது நிர ம்பிய இவர், தனது 14வது வயதிலேயே இந்த மின்னஞ்சல் தொழில் நுட்பத்தைக்கண்டுபிடித்து அறிமுகப்படுத்தி விட்டார்.
இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo (“To:”, “From: ”, “Subject:”, “Bcc:”, “Cc:”, “Date:”, “Body:”), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.)அனைத்து பகுதிக ளையும் உள்ளடக்கிய தகவ ல் பரிமாற்றத்தை இவர்தா ன் கண்டுபிடித்தார் .
ஆனால், குடியேற்ற சிறுபா ன்மை இனத்தவர் என்ற கா ரணத்தினாலோ என்னவோ ,அவருக்கு முதலில் அந்த அங்கீகாரத்தை கொடுக்க வில்லை அமெரிக்கா. அத னால் இமெயில் காப்புரிமைக்கு பலரும் சொந்தம் கொ ண்டாடினர்.
நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறை யாக வி.ஏ.சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இ மெயில்’ ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இவரது கண்டுபிடிப்புக் கு இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் ஆகின்றன.
இதைக் கொண்டாடும் வகையில் ஒரு அர்த்தமுள்ள போட்டியை அறிவித்துள்ளார் டாக்டர் சிவா அய்யாத்துரை. நியூ ஜெர்ஸி மா காணம் நேவார்க் நகரில் ‘இன் னோவேஷன்ஸ் கார்ப்ஸ்’ என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி யுள்ள அவர்,அதன் சார்பில் இந் தப் போட்டியை அறிவித்துள்ளா ர்.
நேவார்க் நகர உயர் நிலைப் பள் ளி மாணவர்களின் புதிய கண்டு பிடிப்புகளுக்கு ஊக்கம், வகையில் ஒருலட்சம் டாலர்கள் பரிசுத் தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார் .
மாணவனாக இருந்தபோதுதனது கண்டுபிடிப்புக் கு அங்கீகாரம் கி டைக்காமல் பல்வேறு சோதனைகளு க்குள்ளானதன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு அந்தசோகம் நேரக் கூடாது என்பதற்காகவும், மாணவர்க ளின் கண்டுபிடிப்புகள ் புதிய தொழில் களை தொடங்கும் வகையிலும் இன் னோவேஷன்ஸ் கார்ப்ஸ்உறுதுணை யாக இருக்கும் என்றார்.
இன்று அமெரிக்காவில் பல தொழில் களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய் யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலை க் கழகமான எம். ஐ.டி யின் விரிவுரையாளராகவ ும் பணிபுரிகிறார்.
சமீபத்தில் நடந்த வடஅமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா)வெள்ளி விழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப்பட்டா ர் என்பது குறிப்பிடத்த க்கது. அவரது ‘இமெயில்’ பயணத்தை http://www.inventorofe/mail.com/ தளத்தில் தெரிந்து கொள்ளலாம் —

Tx M Chitra Chitra