Pages

Friday, September 14, 2012

நூற்றுக்கு ஒன்று குறைவு.........

குறிஞ்சிப் பாட்டினை இயற்றியவர் கபிலர் என்பது நாமறிந்த ஒன்று. அக் குறிஞ்சிப் பாட்டில் கபிலர் 99 வகையான மலர்களைப் பற்றிக் கூறியுள்ளார் என்பது நாமறியாத ஒன்று. தமிழ்நாட்டின் மலர் "செங்காந்தள் மலர்" என்பது நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. மல்லி, முல்லை, கனகாம்பரம் என ஒரு சில மலர்களைத் தவிர மற்றவற்றை நாம் பார்த்ததுக் கூட கிடையாது . ஆனால் கபிலர் கவிஞராக மட்டுமின்றி சிறந்த இயற்கை ஆய்வாளராகவும் இருந்துள்ளார் என்பது வியத்தகு ஒன்று. இதோ கபிலர் கூறிய 99 வகையான மலர்கள் . படித்து மகிழுங்கள்.
நூற்றுக்கு ஒன்று குறைவு அவ்வளவுதான்.......

1. காந்தள் மலர்
2. ஆம்பல் மலர்
3. அனிச்சம் பூ
4. குவளை மலர்
5. குறிஞ்சிப் பூ
6. வெட்சிப் பூ
7. செங்கோடுவேரி மலர்
8. தேமாம் பூ
9. மணிச்சிகை(செம்மணிப்பூ)
10. உந்தூழ்(மூங்கில் பூ)
11. கூவிளம் பூ
12. எறுழம்பூ
13. சுள்ளி(மராமரப்பூ)
14. கூவிரம் பூ
15. வடவனம் பூ
16. வாகைப் பூ
17. குடசம்(வெட்பாலை)
18. எருவை(கோரைப்பூ)
19. செருவிளை(வெண்காக்கணம்)
20. கருவிளம் பூ
21. பயினிப் பூ
22. வானிப் பூ
23. குரவம் பூ
24. பசும்பிடி(பச்சிலைப்பூ)
25. வகுளம்(மகிழம்பூ)
26. காயா மலர்
27. ஆவிரைப் பூ
28. வேரல்(சிறுமூங்கில்பூ)
29. சூரல் மலர்
30. சிறுபூளைப் பூ
31. குறுநறுங்கண்ணி மலர்
32. குருகிலை(முருக்கிலை)
33. மருதம் பூ
34. கோங்கம் பூ
35. போங்கம் பூ
36. திலகம் பூ
37. பாதிரி மலர்
38. செருந்தி மலர்
39. அதிரல் பூ
40. சண்பகம் மலர்
41. கரந்தை மலர்
42. குளவி(காட்டு மல்லி)
43. மாம்பூ
44. தில்லைப்பூ
45. பாலைப்பூ
46. முல்லைப்பூ
47. கஞ்சங்குல்லை
48. பிடவம் பூ
49. செங்கருங்காலி மலர்
50. வாழைப் பூ
51. வள்ளிப் பூ
52. நெய்தல் மலர்
53. தாழைப் பூ
54. தளவம்(செம்முல்லைப் பூ)
55. தாமரை மலர்
56. ஞாழல் மலர்
57. மௌவல் பூ
58. கொகுடிப் பூ
59. சேடல்(பவளமல்லி பூ)
60. செம்மல்(சாதிப் பூ)
61. சிறுகெங்குரலி(கருந்தாமரைக் கொடிப்பூ)
62. கோடல்(வெண்காந்தள் மலர்)
63. கைதை(தாழம் பூ)
64. வழைப் பூ(சுரபுன்னை)
65. காஞ்சிப் பூ
66. கருங்குவளைப் பூ(மணிக்குலை)
67. பாங்கர் பூ
68. மரவம் பூ
69. தணக்கம் பூ
70. ஈங்கைப் பூ
71. இலவம் பூ
72. கொன்றைப் பூ
73. அடுப்பம் பூ
74. ஆத்திப் பூ
75. அவரைப் பூ
76. பகன்றைப் பூ
77. பலாசம் பூ
78. பிண்டி(அசோகம்பூ)
79. வஞ்சிப் பூ
80. பித்திகம்(பிச்சிப் பூ)
81. சிந்துவாரம்(கருநொச்சிப்பூ)
82. தும்பைப் பூ
83. துழாய்ப் பூ
84. தோன்றிப் பூ
85. நந்திப் பூ
86. நறவம்(நறைக் கொடிப்பூ)
87. புன்னாகம் பூ
88. பாரம்(பருத்திப்பூ)
89. பீரம்(பீர்கம்பூ)
90. குருக்கத்திப் பூ
91. ஆரம்(சந்தனப்பூ)
92. காழ்வைப் பூ
93. புன்னைப் பூ
94. நரந்தம்(நாரத்தம்பூ)
95. நாகப்பூ
96. நள்ளிருநாறி(இருள்வாசிப்பூ)
97. குருந்தம் பூ
98. வேங்கைப் பூ
99. புழகுப் பூ.....


தமிழ்……இச்சொல்லை சொன்னதுமே உணர்ச்சிமேலிட்டு மேனிசிலிர்த்து நிற்பவர்கள் பலர்…! அந்த மொழிக்கு….அந்த மொழியை பேசுபவர்களுக்கு அப்படி ஒரு பெருமை….! இல்லாமலில்லை. எத்தனையோ பிரளயங்களைக்கண்டும், எத்தனை அழிவுகளைச்சந்தித்தும்,எத்தனை பண்பாட்டுப்படையெடுப்புக்களை எதிர்கொண்டும் அயர்ந்துபோகாது கம்பீரமாக நிற்கும் மொழி. இன்று செம்மொழி என்று கூறப்படும் மொழிகளில் 100 வீதம் செம்மொழிக்கான தகைமைகளைப்பூர்த்தி செய்து நிற்கும் மொழி. அம்மொழியைப்பேசுபவன் அதன் அருமை புரியாமல், ஒருபோது அதை வடமொழியோடு புணரவிட்டான். விளைவு? அன்று தமிழ்வளர்த்த சேரநாடு இன்று மலையாளம் என்ற புதுமொழியைத்தாங்கி நிற்கிறது. முன்பொருமுறை ஆரியமாயையில் சிக்கியிருந்தவன் இன்று ஆங்கில மாயையில் சிக்கி தமிழை ஆங்கிலத்தால் கற்பழிக்கவிட்டான். இன்று புதிதாக “தமிங்கிலீஷ்” எனும் மொழி உதயமாகியிருக்கிறது. தமிழ்கூறும் நல்லுலகை அது என்றைக்கு முற்றுமுழுதாக “ற்றமில் னாடு” ஆக்கப்போகிறதோ தெரியவில்லை.
ஆங்கிலம் முக்கியமில்லை என்று சொல்லவரவில்லை. ஆனால் ஆங்கிலத்திற்காக தாய்மொழியை விட்டுக்கொடுக்காதீர். நம் பழைய வரலாற்றை கொஞ்சம் திரும்பிப்பார்த்தால் உண்மையிலேயே மிகுந்த பெருமையாயிருக்கும். ஆனால் வீணே பெருமைப்படுவதிலோ வெறுமனே தமிழர்-தமிழ் என்று உணர்ச்சிவசப்படுவதிலோ அர்த்தமில்லை. அந்தப்பழங்கதைகளிலிருந்து பாடங்கள் கற்க வேண்டும். எழமுடியாத காயங்களுடன் வீழ்ந்து கிடக்கும் நாம், வீறுகொண்டு எழவேண்டும். அந்த வீறு, மெல்லத்தமிழினி….. என்று வெம்பிய பாரதியின் வரிகளை வெல்லவேண்டும். நாளைய சந்ததிக்கும் தேவையானதும் அதுவே!
இதில் குறிப்பிடப்படும் பெரும்பாலான விடயங்களை அறியத்தந்த தமிழ்