Pages

Sunday, December 16, 2012

பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!



மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங

்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவ

ு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!

Kannaa.! Ithu epdi Iruku.?

Thursday, November 8, 2012

ஐசக் நியூட்டன்

hi friends .......... என்னைக் கவர்ந்த கதைகள் மற்றும் மனிதர்களின் வாழ்க்கை தொகுப்பை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.அதற்கு இது முதல் படி .....இன்று முதல் என்நைக் கவர்ந்த மற்றும் என் சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு என கருதுகிறேன் ....
இங்கிலாந்த் நாட்டில் 1642 ஆம் வருடம் .அந்த வருடம் இங்கிலாந்திற்கு மட்டும் அல்ல உலகத்திற்கே ஒரு புனித வருடம் .ஆம் அதே ஆண்டில் டிசம்பர் 25 ஆம் நாள் பிறந்த ஒரு அறிவியல் மேதையின் பிறப்பு அந்த வருடத்தை புனித படுத்தியது .அவர் தான் "father of modern physics" ஐசக் நியூட்டன். அவரை பற்றிய முழு குறிப்பு களையும் நான் பகிர வில்லை.எதோ என் அறிவுக்கு எட்டிய சில குறிப்புகளை இங்கு உங்கள் முன் பகிர ஆசை படுகிறேன்.
"என்ன இது இவன் புதிதாக சிந்தனைகள் கருத்துகள் என உளறுகிறான் என என்ன வேண்டாம் .எவ்வளவு நாள் தான் வீட்டில் வேலை வெட்டி இல்லாமல் இருப்பது .பொழுது போகவில்லை அதன் விளைவு தான் இந்த தீடிர் சிந்தனை" ........
என்ன தான் ஐசக் நியூட்டன்"father of modern physics" என்று போற்ற பட்டாலும் ,சிறு வயதில் அவருக்கும் கல்விக்கும் மிக தூரம் ஆம் அவருக்கு படிப்பில் ஆர்வம் இல்லை.அவருடைய ஆர்வம் எல்லாம் புதிது புதிதாக சிந்தனை செய்வதும் விளையாட்டு கருவிகளை உருவாக்குவதில் மட்டுமே இருந்தது..... இயற்கையில் நமக்கு சாதரணமாக தோன்றும் நிகழ்ச்சிகள் யாவும் அவருக்கு மட்டும் அறிவு ஆராய்சிக்கு ஏற்ற வினாக்கள் ஆக தோன்றியது .அதுவே அவரை பிற்காலத்தில் மிக பெரிய மேதையாகவும் மாற்றியது . அதற்கு உதாரனமாக நான் படித்த ஒரு குறிப்பை இங்கு வைக்கிறேன்.
அது ஒரு விடுமுறை நாள்...நியூட்டன் மைதானத்தில் தன் நண்பர்களோடு விளையாடி கொண்டு இருந்தார்.அப்போது தீடிர் என்று காற்று வேகமாக வீச தொடங்கியது ..உடனே அவர் காற்றின் வேகத்தை அறிந்து கொள்ள ஆவல் கொண்டார். கண்ணனுக்கு தெரியாத காற்றின் வேகத்தை எப்படி அளப்பது என்ற கேள்வி முதலில் அவர் மனதில் தோன்றினாலும்.காற்றின் வேகத்தை எப்படியாவது அளக்க வேண்டும் என்கிற அவருடைய ஆர்வத்தின் விளைவு அவருக்கு அது எட்டா கனியாக தோன்றவில்லை.
ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு அவருக்கு ஒரு எளிய வழி தோன்றியது. முதலில் காற்று அடிக்கும் திசையில் குதித்து பார்த்தார்.பின்னர் காற்று அடிக்கும் எதிர் திசையில் குதித்து பார்த்தார்.அதே போன்று காற்றே அடிக்காத மற்றொரு நாளில் அதே சோதனையை மறுபடியும் செய்து பார்த்தார்.இது போன்று வெவ்வேறு காற்றின் வேகத்தின் நிலைகளில் அவர் தாவிய தூரத்தை அளந்து பார்த்தார்,தாவிய தூரத்தின் அளவு வெவ்வேறாக இருந்தது .இதில் கண்ட வேற்றுமைகளை ஒப்பிட்டார் .சில கணிப்புகளை கணித்து பார்த்தார் .காற்றின் வேகத்தை கணக்காக கூறினார் .
இது போன்ற இயற்கையின் ரகசியங்களை ஆராய்வதில் அவர் தன் முழு நேர சிந்தனையை செலவிட்டார் .ஆனால் படிப்பிலோ எந்த வித நாட்டமும் இல்லை. இந்நிலையில் நியூட்டனின் 14 வயதில் அவருடைய குடும்ப நிலையின் காரணத்தால் அன்னையின் கட்டளையின் பேரில் படிப்பை கைவிட்ட அவர், அவருடைய பண்ணையில் ஆடு மாடுகளை பராமரித்து வந்தார்.இருந்த போதும் இயற்கையின் மீது இருந்த அவரின் காதல் குறையவில்லை.அவரின் ஆர்வம் அனைத்தும் புதிய ஆராய்ச்சியிலும் நிறைய புத்தகம் படிப்பதில் மட்டுமே இருந்தது .இதனைக் கண்ட அவரின் அன்னை அவரை மீண்டும் பள்ளியில் சேர்த்து விட்டார் .
பின்னர் 1661இல் cambridge கல்லூரியில் தனது மேற் படிப்பை தொடர்ந்தார்.கல்லூரியில் சேர்ந்த பிறகு தனது தனி திறமையை வெளிக்கொணர்ந்தார் .நிறைய ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதினார்.பின்னர் ஒரு ஓய்வு நாளில் தன் பண்ணையில் இருந்த போது தோன்றியதுதான் "newton's theory of gravity" அவராலேயே ஆப்பிள் கனி அறிவியல் வரலாற்றில் அழியா புகழ் பெற்றது . நியூட்டன் அதன் பிறகு பல பல அறிவியல் விதிகளை உலகிற்கு வித்திட்டார் . அவரின் ஆர்வமும் விடா முயற்சியும்,அவரின் அளவு கடந்த இயற்கையின் மேல் இருந்த ஆர்வமே அவரை மிக பெரிய அறிவியல் மேதை ஆக்கியது .
"நமக்கு மிகவும் பிடித்தமான விசயத்தில் நமது ஆர்வத்தை செலுத்தினால் ஒரு நாள் புகழ் பெறுவோம்.புகழ் பெறாவிட்டாலும் நமக்கு பிடித்த விசயத்தில் நமது மனதை செலுத்தும் போது மன நிறைவேனும் கிடைக்கும்.அது நாம் தேர்ந்தெடுக்கும் கல்வியாக இருந்தாலும் சரி வேலையாக இருந்தாலும் சரி....... உங்கள் ஆர்வத்திற்கு அணை போடாதிர்கள்.ஆர்வம் ஒன்று மட்டுமே நம் புதிய ஆக்கத்திற்கு வழி. இவை நியூட்டனின் பொன்மொழிகள்".அதை நாமும் பின்பற்றினால் நாமும் ஒரு நாள் புகழ் பெறுவோம் என்று கூறி இதோடு இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

Sunday, October 21, 2012

சிவாஜி கணேசனுக்கு பிரியாவிடை கூறல்





ஒரு பண்பாட்டாய்வியற் குறிப்பு



-கார்த்திகேசு சிவத்தம்பி -


சிவாஜிகணேசன் மறைந்து விட்டார் என்ற செய்தி தொலைக்காட்சி வழியாக வந்தபொழுது (21.07.2001) அது தமிழகத்தின் கடந்த மாத காலத்தின் அசாதாரண நிகழ்வுகள் பற்றிய நினைப்புகளுக்குள் அமிழ்ந்து விடும் போலவே இருந்தது.


ஆனால், வந்த நிகழ்ச்சிகள் அப்படி அமையவில்லை. மரணம் இயற்கை மரணம் என்றாலும், இழப்பு திடீரென வந்தது போலவும், அந்த இழப்பு சின்னதொன்றல்ல, மிகப் பெரியது, முழுத் தமிழகம் தழுவியது என்ற தொனியில் ஊடகங்கள் எடுத்துரைக்கத் தொடங்க அந்த எடுத்துரைப்பு தமிழுணர்வில் படியத் தொடங்க, அந்த மனிதன் மறைவுக்குள் தமிழ்ப் பண்பாட்டின் 'இனங்காணல்கள்' சில தொக்கி நிற்கின்றன என்பது புரியத் தொடங்கியது.


அரசியல் தன்னை ஒதுக்கியது கண்டு ஒதுங்கிப் போய் தன் நடிப்பும் தானும் என்றிருந்த சிவாஜிகணேசனுக்கு இறுதி மரியாதையாக வீரர்களுக்கு வழங்கப்படும் இறுதி கெளரவம் (துவக்குவேட்டு மரியாதை, 'லாஸ்ற்போஸற்' இசைப்பு) வழங்கப்பட்டது. சோகம் தமிழகத்தையும் தமிழ் பேசும் உலகத்தையும் தாண்டியது. அனைத்திந்திய சோகம் ஆயிற்று.



சென்னையில் நடந்த இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாத வெளிமாவட்டத்தினர் தங்கள் தங்கள் மாவட்ட நகரங்களில் இறுதிமரியாதைச் சடங்குகளை மீளுருப்படுத்திக் கொண்டாடினர். பெண்கள் அழுதனர். ஆண்கள் மொட்டை அடித்தனர்.


உண்மையான ஆச்சரியம் என்னவென்றால் இந்த உணர்வு வெளிப்பாடுகள், போலியானவையாக இருக்கவில்லை. சினிமாத்தனம் என்று சொல்வோமே அந்தப் பண்பினவாக இருக்கவில்லை.


இந்த 'நிகழ்ச்சி' (நிகழ்வு அல்ல) தமிழ்நாட்டின் பண்பாட்டுச் சமூகவியலில் ஈடுபாடு கொண்டுள்ளவர்கள் ஆய்வுக்கான ஒன்றாகும்.


அரசியற் பலமும், சமூக அதிகாரமும் இல்லாதிருந்த சிவாஜிகணேசனுக்கு இத்தகைய நெஞ்சுருக்கும் இறுதி மரியாதை ஏன் கிடைத்தது என்பது ஒரு முக்கியமான வினாவாகும்.


அதற்கான விடை காணும் பணியினை மேற்கொள்வதற்கு முதல் இந்த நிலைமையை உருவாக்கியது ஊடகத் தொழிற்பாடு தான் என்பதை மறுக்கமுடியாது. தொலைக்காட்சி அலைவழிகளும் வானொலிச் சேவைகளும் சிவாஜிகணேசன் எதனைச் 'சுட்டி' நின்றார் என்பதை மீளமீளச் சொல்லின. இவையாவற்றையும் தொகுத்துக் கூறுவது போல் அமைந்தது, சன் தொலைக்காட்சியினர் அளித்த ஒரு ஒன்றரை நிமிட நேர சிவாஜித் தொகுப்பு. சிவாஜி நடித்த பிரதான பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் ஒன்று மாறி ஒன்றாக நம் கண்முன்னேயோட விட்டனர்.


அப்பொழுது தான் அந்த உண்மை பளிச்சிட்டது.


தமிழகத்திலும், தமிழ் பேசும் நாடுகளிலும், தமிழுணர்வு, தமிழ் பாரம்பரியம் பற்றிய சிரத்தை சமூக அரசியற் பிரக்ஞையில் முக்கிய இடம் வகித்த இருபதாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் தமிழர் தொன்மைகளிலும், வரலாற்றிலும் முக்கிய இடம் பெறும் பலரை 'மீள் உருவப்படுத்தியவர்' சிவாஜிகணேசனே.


காப்பிய பாத்திரங்கள் - கர்ணன், பரதன்; சமய பாத்திரங்கள் - அப்பர்; அரசியற் பாத்திரங்கள் - இராஜராஜன், கட்டபொம்மன், வ.உ. சிதம்பரனார்.


சிவாஜியின் ஆளுமைக் கூடாகவே நாம் இந்தப் பாத்திரங்களைக் கண்டோம். அவர்களை மனிதர்களாகச் சந்தித்தோம்.


தமிழ்ப் பண்பாட்டு உணர்வு விருத்தியில் இந்த 'மீள் உருவாக்கம்' மிகமிக முக்கியமாக அமைந்தது. இந்த உருவாக்கங்களுக்கான அரசியல் இலாபத்தைப் பெறும் ஆற்றல் விழுப்புரம் சின்னையா கணேசனிடத் திலிருக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், அந்த நடிகன் மூலமாகவே நாம் தமிழனின் அசாதாரணத் திறன்களைக் கற்பனை செய்தோம், கண்முன் நிறுத்தினோம்.


அந்த வகையில் சிவாஜி தமிழ்ப் பண்பாட்டின் 'உருவத் திருமேனிகளில்' ஒன்றாகிறார்.


சிவாஜி பற்றிய ஊடக மீள நோக்குகள் தமிழ் சினிமா மூலம் நாம் பெற்றுக் கொண்ட 'உணர்வு அகற்சி'களை காட்சிப்படுத்திய - காணபியப்படுத்திய கலைஞனை, அவன் திறனை முதனிலைப்படுத்தின.


அந்த உணர்வின் படிப்படியான ஆழப்பாடுதான் சிவாஜியின் செயற்பாடு மூலம் நாம் எவ்வகை உருவாக்கங்களைப் பெற்றோம் என்பதை வெளிப்படுத்தத் தொடங்கிற்று.


சிவாஜியின் பாத்திரங்கள் பற்றிய சிந்தனை சமகாலத் தமிழ்ப் பண்பாட்டின், அந்த பண்பாட்டின் வாழ்வியலில், ஆள்நிலை உறவுகளில், சமூக அலகு உறவுகளில், குறிப்பாக குடும்ப உறவுகளில் எவையெவை மோதுகை அம்சங்களாக அமைகின்றன என்பது பற்றிய உணர்வை வலுப்படுத்தும்.


நாடகத்தின் - அரங்கின் - பிரதான பயன்பாடுகளில் ஒன்று மனிதர்களை அவர்களின் மோதுகை நிலையிலே காட்டுவது தான். இது நாடகம் (அரங்கு) பற்றிய உலகப் பொதுவான விதி. அரங்கின் விஸ்தரிப்பாக அமைந்த சினிமாவும் இந்த மோதுகைகளை மிகச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது.


தமிழ் நிலையில் இந்த மோதுகைகளை சிவாஜிகணேசனைப் போன்று எவரும் சித்தரிக்கவில்லை. பாத்திரத் தொகையிலும், சித்தரிப்பு ஆழத்திலும் சிவாஜியின் சாதனை மிகப் பெரியது.


மிக மேலோட்டமாகப் பார்த்தாலே இந்த உண்மை புலனாகும். பாசமலர், படிக்காத மேதை, பாகப்பிரிவினை, மங்கையர் திலகம், தங்கப்பதக்கம், வசந்தமாளிகை, முதல்மரியாதை, தேவர் மகன் முதலிய திரைப்படங்களில் பிரதான கதாபாத்திரங்களின் (சிவாஜி சித்தரித்தவை) மோதுகை நிலைகளைப் பார்த்தால் இந்த உண்மை நமக்கு புலப்படும். இந்த அம்சத்தைப் பற்றி சற்று உன்னிப்பாக ஆராய முனையும் பொழுதுதான், சிவாஜியின் நடிப்பு வரலாற்றின் ஒரு முக்கிய உண்மை தெரியவரும். சிவாஜி சித்தரித்த பாத்திரங்கள் பெரும்பாலும் (ஏறத்தாழ எல்லாமே) இந்த மோதுகைகளின் 'பாடு'களை தாங்குகின்றனவாக - துன்பத்தையேற்றுக் கொள்கின்றனவாக அமைந்தன என்பது தெரியும்.


சிவாஜிகணேசன் பற்றிய நினைவுகள் நமக்கு, நமது பண்பாட்டு வட்டத்து வாழ்வியலின் 'மனிதத்துவப் பாடுகளை', 'மனித நிலை சோகங்களை' எடுத்துக் காட்டுகின்றனவாக அமையும்.


சிவாஜிகணேசனுக்குள் இருந்த நடிப்புத் திறன் பிறர் இன்ப, துன்பங்களை தன் உணர்வு நிலைக்குள் உள்வாங்கிச் சித்தரிப்பவன் - இந்த மனித மோதுகைச் சித்தரிப்புக்கான தேடலை ஊக்குவித்தது.


'நடிகனுக்கான சவால்' என்பது இந்தச் சித்தரிப்புக்குள் தான். தனது இந்தப் பணி நன்கு நிறைவேறுவதற்கு அந்த நடிகரோடு 'ஊடாடும்' மற்றைய பாத்திரம் முக்கியமாகும். இதனால், சிவாஜியோடு நடிக்கும் நடிகையர், துணைப் பாத்திரங்கள் மிக முக்கியமாகினர். தான் மதித்த நடிகையர் என பானுமதி, பத்மினி, சாவித்திரியின் பெயர்களை சிவாஜிகணேசன் எடுத்துக் கூறியுள்ளார். (இலங்கை வானொலி 22.07.2001 அன்று இ.தயானந்தா அளித்த நினைவு நிகழ்ச்சி) சிவாஜிகணேசன் 'சுட்டி'நிற்கும் பண்பாட்டுத் தொழிற்பாடுகளைப பற்றி ஆராயும் பொழுது தான் சிவாஜிகணேசனின் சினிமா வருகையும், அதன் பின்புலமும் உற்றுநோக்கப்பட வேண்டியவையாகின்றன.


தமிழ்த் திரையுலகத்தின் 'அமர' கதாநாயகன் சிவாஜி ஒருவர் தான் என்று கூறவே முடியாது. அவர் காலத்து வாழ்ந்த மதனபள்ளி கோபால் இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) முக்கியமானவர். எம்ஜிஆர் தமிழ் சினிமாவை பயன்படுத்தியது போலச் சிவாஜியால் பயன்படுத்த முடியவில்லை. வளப்படுத்தியதுடன நின்று விடவேண்டிய நிலைமை ஏற்பட்டது.


இங்கு முக்கியமாக பார்க்க வேண்டுவது, சிவாஜியின் சமகாலத்தவர்களிலும் பார்க்க, சிவாஜியின் வருகைக்கு முன்னர் இருந்தவர்களே.


தியாகராஜ பாகவதருக்குச் சிவாஜியை விட கவர்ச்சி இருந்தது. கே.ஆர். ராமசாமி 'வேலைக்காரி' மூலம் மிகப் பெரிய புகழை ஈட்டியிருந்தார். சிவாஜிக்கு முன்னர் வந்தவர்களுக்கும் சிவாஜிக்குமிருந்த முக்கிய வேறுபாடு, அவர்கள் பிரதானமாக பாடகர்களே (பாடகர்கள் அல்லாதவர்கள் பிரசித்தமடைவது 1950 களின் பின்னரே - எம்ஜிஆர், ஜெமினிகணேசன் முதலியோர்) சிவாஜி உச்சரிப்புச் செம்மையையே தனது பிரதான ஆஸ்தியாகக் கொண்டிருந்தார்.


சிவாஜியின் நடிப்பு அங்க அசைவுகளில் மாத்திரம் நம்பியிருக்கவில்லை. அது 'சொற் சீரமை'யிலும் தங்கியிருந்தது.


இந்தச் சொற் சீரமை ஓர் அரசியல் பின்புலத்தோடு வந்தது. அண்ணாதுரை, கருணாநிதி தமிழ்நாட்டின் அரசியல் மேடையையும், அரங்கையும், சினிமாவையும், தமது சொற்பொழிவு முறையாலும், எழுத்து முறையாலும் மாற்றிய காலம் அது. அரங்கில் பாட்டுப் போய் வசனம் முக்கியமான காலம். கதையிலும் பார்க்க வசனத்துக்கு முக்கியத்துவம் வரத்தொடங்கிய காலம்.


சினிமாவுக்குள் இந்தப் போக்கை ஸ்திரப்படுத்திய பாரசக்தி மூலம் சிவாஜிகணேசன் அறிமுகமானார். தமிழ்ச் சினிமாவில் நடிப்பு, இப்படத்துடன் ஒரு புதிய பரிமாணத்தை பெறுகின்றனது.


சிவாஜிகணேசனின் இந்த வருகை இவரை மற்றச் சினிமா நாயகர்களிலிருந்து வேறுபடுத்துகின்றது.


தமிழ்ச் சினிமாவுக்கான நடிப்புக் கலைஞர் வருகை ஸ்பெர்ல் நாடக மரபு வழியாகவே நிகழ்ந்தது. இதனால், ஆரம்ப காலத் தமிழ்ச் சினிமா அமைப்பிலும், எடுத்துரைப்பிலும் அந்த நாடக அரங்கின் இயல்புகளையே கொண்டிருந்தது.


சிவாஜிகணேசனின் நடிப்பு முறைமை இந்திய நாடக மரபின் 'நாட்டிய தர்ம'முறை வழியாக வருவது (இது பற்றி மூன்றாவது மனிதன் ஜூலை இதழில் வந்த எனது கட்டுரையைப் பார்க்கவும்) சிவாஜிகணேசன் 'நாடக வழக்கு'க்கான ஆற்றுகையை தெருக்கூத்து மரபுக்குரிய 'அகல்வீச்சு' ஆங்கில வழியாகச் செய்தார்.


அப்படித் தொடங்கியவர் பின்னர் படிப்படியாக சினிமா என்ற ஊடகத்தின் தனித்துவமான 'காமரா வழிப்பார்வை எடுத்துரைப்பு' என்ற அம்சத்தினால் உள்வாங்கப்பட்டு அதற்குரிய நடிப்பிலே கவனம் செலுத்தத் தொடங்குகிறார்.


நடிகர் முதன்மைக்குப் பழக்கப்பட்டுப் போன தமிழ் சினிமா படிப்படியாக 'டைரக்டர் முதன்மை'க்கு வரத்தொடங்கியது. இந்த மாற்றத்தில் பாலச்சந்தர் பெயர் பெரிதும் அடிபட்டாலும் உண்மையில் கட்புலநிலை, நின்று நோக்கும் பொழுது தமிழ்ச் சினிமாவின் தமிழ் மண்வாசனை பாரதிராஜாவுடனேயே முனைப்புப் பெறுகின்றது.


பாலச்சந்தர், பாரதிராஜா வருகைக்கு முன்னர் எம்ஜிஆர், சிவாஜி 'கோலோச்சி' நின்ற காலத்தில் படப்பிடிப்பின் பொழுது கமராவின் அசைவியக்கத்தையும், கோணங்களையும் இந்தப் பெரும் நடிகர்களே தீர்மானித்தார்களாம். (இது பற்றி சத்யஜித்ரே கூட ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்) அந்த அமைப்பு 'மேடைத்தன்மை' யானதாக விருந்தது.


நெறியாளர்கள் முக்கியமாகத் தொடங்க சிவாஜியின் நடிப்பில் புதிய ஒரு விகசிப்பு ஏற்படுகின்றது. 'முதல் மரியாதை' சிவாஜியின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.


நாடக மரபின் சிசுவாக இருந்த சிவாஜிகணேசன், சினிமாவுக்கேற்ற நடிப்பின் விற்பன்னராகினார். சிவாஜியின் சினிமா வாழ்க்கை தமிழ்ச் சினிமாவின் இந்த வரலாற்றுக் கட்டத்தை எடுத்துக் காட்டுகின்றது.


சினிமா படிமங்களின் கலை - அசையும் படிமங்களின் கலை. அதனால்தான் அதை 'மோர்ன் பிக்சர்' (அசையும் படம்) என்பர்.


சமகால ஊடக உலகின் படிமத் தயாரிப்பில் சினிமாவுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. உலக நிலையில் தொழிற்பட்ட இந்த உண்மை தமிழ்ப் பண்பாட்டினுள்ளும், தமிழ்ச் சினிமாவின் ஊடாகத் தொழிற்படத் தொடங்கியது.


பணபாட்டுப் பிரக்ஞை பிரதானப்படத்தொடங்கிய சமூக அரசியற் சூழலில் அதற்கான ஆள்நிலைப் படிமங்களும் தோன்றின. அந்த நடைமுறையில் தனது சித்தரிப்பு திறனாலும், பல்வேறு பாத்திரத் தேர்வினாலும், நமது பண்பாட்டு வாழ்வியலின் ஒரு 'உருவத்திருமேனி'யாக சிவாஜிகணேசன் என்ற வி.சி. கணேசன் திகழ்ந்தார்.


அவர் மறைவுதான் அவரின் பாரிய படிம வாக்க முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்திற்று.


தமிழ்ப் பண்பாட்டில் நாடக ஆற்றுகையாளர்களை விதந்து கூறும் பண்பு நவீன காலத்திலேயே ஆரம்பிக்கின்றது. இவர்களின் பங்களிப்பு தமிழ்ப் பண்பாட்டின் நவீன கால இயக்கத்துக்கு முக்கியமாகிற்று. என்.எஸ். கிருஷ்ணன் எம்.ஜி. இராமச்சந்திரன் என வரும் அப்பட்டியலில் சிவாஜிகணேசனுக்கு நிரந்தரமான இடமுண்டு.


நன்றி:தினகுரல் 29.07.2001.

Tuesday, October 16, 2012

''எங்களை எல்லாம் பார்த்தவுடன் பிடிக்காது பார்க்க பார்க்க தான் பிடிக்கும்''


விடிந்தும்
விழிக்காதவன் !


விழித்தாலும்
பல்விலக்காதவன் !


பல்விலக்கினாலும்
குளிக்காதவன் !


குளித்தாலும்
சாப்பிடாதவன் !


இப்படி பல பொய்களை
அவ்வப்போது சொல்பவன் !


பல பெண்களை தூரத்தில்
இருந்து ரசிப்பவன் !


சிலர் அருகில் இருந்தால்
மூச்சு தினருபவன் !


பெருமை,
பொறாமை,
கோபம்,
புகழ்,
பதவி,
இவைகள் இல்லாமல்
அமைதியாய்
வாழ நினைப்பவன் !


சில நேரங்களில்
இவைகளால்
அமைதி இல்லாமல்
ஆறுதல் தேடுபவன் !


சொந்த பந்தங்களை
விரும்புபவன் !
அவர்களின் மனக்கணக்கு
புரியாமல் கலங்குபவன் !


பாடல்களை பாடத் தெரியாதவன்,
ஆனால் அதை எப்போதும்
கேட்டுக்கொண்டே இருப்பவன் !


வாழ்க்கையில்
எப்பொழுதும்
எதையாவது
தேடிக்கொண்டே இருக்க வேண்டும்
என்று ஆசை !
ஆனால் தொலைத்ததை
தேட மறுப்பவன் !


பணத்தை பத்தோடு பதினொன்றாய்
கருதுபவன் !
குணத்தை பத்தில் ஒன்றாய்
போற்றுபவன் !


கணக்கு போட்டு செலவு செய்ய
விரும்பாதவன் !
அப்படி செய்பவர்களை
நெஞ்சில் வஞ்சிக்கொண்டு
பல்லை இழிதுக்கொண்டு
பாராட்டுபவன் !


தற்பெருமையை சொல்ல
விரும்பாதவன் !
சுயமரியாதைக்காக சொல்லிய பின்
என்னை கண்டிப்பவன் !


காகிதத்தில் வரையத் தெரியாதவன் !
கணிப்பொறியில்
வண்ணம்
தீட்டுபவன் !


முக்கியமாக என்னவளுக்காக
என்றிருந்தோ காத்திருப்பவன் !
என்றும் காத்திருப்பவன் !


பலருக்கு நண்பன்,
சிலருக்கு நெருங்கிய நண்பன்,
உங்களுக்கு ?


Tuesday, October 9, 2012

இ மெயிலை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும் ?



இ மெயிலை கண்டுபிடித்தவர் (உருவாக்கியவர்) ஒரு தமிழர் V.A. Shiva Ayyadurai,Inven tor of EMAIL:
இன்றைக்கு இமெயில் என்ற வசதி இல்லாத வாழ்க்கையை கற்ப னைகூடசெய்து பார்க்க முடியவில் லை அல்லவா…
அந்த வசதியை அறிமுகப்படுத்தி ய வர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக் கும்?ஆம்! அதுதான் உண்மை. இன் று
உலகையே ஒருவலைக்குள் இ ணைத்த பெருமைக்குரிய இ மெயி ல் வசதியை நம்மஊர் தமிழர் ஒரு வர்தான் கண்டு பிடித்தார். அதற்கா ன காப்புரி மையையும் பெற்றுள்ளார்.
அவர் பெயர் வி ஏ சிவா அய்யாத்துரை. இன்றைக்கு முப்பதுவயது நிர ம்பிய இவர், தனது 14வது வயதிலேயே இந்த மின்னஞ்சல் தொழில் நுட்பத்தைக்கண்டுபிடித்து அறிமுகப்படுத்தி விட்டார்.
இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo (“To:”, “From: ”, “Subject:”, “Bcc:”, “Cc:”, “Date:”, “Body:”), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.)அனைத்து பகுதிக ளையும் உள்ளடக்கிய தகவ ல் பரிமாற்றத்தை இவர்தா ன் கண்டுபிடித்தார் .
ஆனால், குடியேற்ற சிறுபா ன்மை இனத்தவர் என்ற கா ரணத்தினாலோ என்னவோ ,அவருக்கு முதலில் அந்த அங்கீகாரத்தை கொடுக்க வில்லை அமெரிக்கா. அத னால் இமெயில் காப்புரிமைக்கு பலரும் சொந்தம் கொ ண்டாடினர்.
நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறை யாக வி.ஏ.சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இ மெயில்’ ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இவரது கண்டுபிடிப்புக் கு இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் ஆகின்றன.
இதைக் கொண்டாடும் வகையில் ஒரு அர்த்தமுள்ள போட்டியை அறிவித்துள்ளார் டாக்டர் சிவா அய்யாத்துரை. நியூ ஜெர்ஸி மா காணம் நேவார்க் நகரில் ‘இன் னோவேஷன்ஸ் கார்ப்ஸ்’ என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி யுள்ள அவர்,அதன் சார்பில் இந் தப் போட்டியை அறிவித்துள்ளா ர்.
நேவார்க் நகர உயர் நிலைப் பள் ளி மாணவர்களின் புதிய கண்டு பிடிப்புகளுக்கு ஊக்கம், வகையில் ஒருலட்சம் டாலர்கள் பரிசுத் தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார் .
மாணவனாக இருந்தபோதுதனது கண்டுபிடிப்புக் கு அங்கீகாரம் கி டைக்காமல் பல்வேறு சோதனைகளு க்குள்ளானதன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு அந்தசோகம் நேரக் கூடாது என்பதற்காகவும், மாணவர்க ளின் கண்டுபிடிப்புகள ் புதிய தொழில் களை தொடங்கும் வகையிலும் இன் னோவேஷன்ஸ் கார்ப்ஸ்உறுதுணை யாக இருக்கும் என்றார்.
இன்று அமெரிக்காவில் பல தொழில் களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய் யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலை க் கழகமான எம். ஐ.டி யின் விரிவுரையாளராகவ ும் பணிபுரிகிறார்.
சமீபத்தில் நடந்த வடஅமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா)வெள்ளி விழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப்பட்டா ர் என்பது குறிப்பிடத்த க்கது. அவரது ‘இமெயில்’ பயணத்தை http://www.inventorofe/mail.com/ தளத்தில் தெரிந்து கொள்ளலாம் —

Tx M Chitra Chitra

Friday, September 14, 2012

நூற்றுக்கு ஒன்று குறைவு.........

குறிஞ்சிப் பாட்டினை இயற்றியவர் கபிலர் என்பது நாமறிந்த ஒன்று. அக் குறிஞ்சிப் பாட்டில் கபிலர் 99 வகையான மலர்களைப் பற்றிக் கூறியுள்ளார் என்பது நாமறியாத ஒன்று. தமிழ்நாட்டின் மலர் "செங்காந்தள் மலர்" என்பது நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. மல்லி, முல்லை, கனகாம்பரம் என ஒரு சில மலர்களைத் தவிர மற்றவற்றை நாம் பார்த்ததுக் கூட கிடையாது . ஆனால் கபிலர் கவிஞராக மட்டுமின்றி சிறந்த இயற்கை ஆய்வாளராகவும் இருந்துள்ளார் என்பது வியத்தகு ஒன்று. இதோ கபிலர் கூறிய 99 வகையான மலர்கள் . படித்து மகிழுங்கள்.
நூற்றுக்கு ஒன்று குறைவு அவ்வளவுதான்.......

1. காந்தள் மலர்
2. ஆம்பல் மலர்
3. அனிச்சம் பூ
4. குவளை மலர்
5. குறிஞ்சிப் பூ
6. வெட்சிப் பூ
7. செங்கோடுவேரி மலர்
8. தேமாம் பூ
9. மணிச்சிகை(செம்மணிப்பூ)
10. உந்தூழ்(மூங்கில் பூ)
11. கூவிளம் பூ
12. எறுழம்பூ
13. சுள்ளி(மராமரப்பூ)
14. கூவிரம் பூ
15. வடவனம் பூ
16. வாகைப் பூ
17. குடசம்(வெட்பாலை)
18. எருவை(கோரைப்பூ)
19. செருவிளை(வெண்காக்கணம்)
20. கருவிளம் பூ
21. பயினிப் பூ
22. வானிப் பூ
23. குரவம் பூ
24. பசும்பிடி(பச்சிலைப்பூ)
25. வகுளம்(மகிழம்பூ)
26. காயா மலர்
27. ஆவிரைப் பூ
28. வேரல்(சிறுமூங்கில்பூ)
29. சூரல் மலர்
30. சிறுபூளைப் பூ
31. குறுநறுங்கண்ணி மலர்
32. குருகிலை(முருக்கிலை)
33. மருதம் பூ
34. கோங்கம் பூ
35. போங்கம் பூ
36. திலகம் பூ
37. பாதிரி மலர்
38. செருந்தி மலர்
39. அதிரல் பூ
40. சண்பகம் மலர்
41. கரந்தை மலர்
42. குளவி(காட்டு மல்லி)
43. மாம்பூ
44. தில்லைப்பூ
45. பாலைப்பூ
46. முல்லைப்பூ
47. கஞ்சங்குல்லை
48. பிடவம் பூ
49. செங்கருங்காலி மலர்
50. வாழைப் பூ
51. வள்ளிப் பூ
52. நெய்தல் மலர்
53. தாழைப் பூ
54. தளவம்(செம்முல்லைப் பூ)
55. தாமரை மலர்
56. ஞாழல் மலர்
57. மௌவல் பூ
58. கொகுடிப் பூ
59. சேடல்(பவளமல்லி பூ)
60. செம்மல்(சாதிப் பூ)
61. சிறுகெங்குரலி(கருந்தாமரைக் கொடிப்பூ)
62. கோடல்(வெண்காந்தள் மலர்)
63. கைதை(தாழம் பூ)
64. வழைப் பூ(சுரபுன்னை)
65. காஞ்சிப் பூ
66. கருங்குவளைப் பூ(மணிக்குலை)
67. பாங்கர் பூ
68. மரவம் பூ
69. தணக்கம் பூ
70. ஈங்கைப் பூ
71. இலவம் பூ
72. கொன்றைப் பூ
73. அடுப்பம் பூ
74. ஆத்திப் பூ
75. அவரைப் பூ
76. பகன்றைப் பூ
77. பலாசம் பூ
78. பிண்டி(அசோகம்பூ)
79. வஞ்சிப் பூ
80. பித்திகம்(பிச்சிப் பூ)
81. சிந்துவாரம்(கருநொச்சிப்பூ)
82. தும்பைப் பூ
83. துழாய்ப் பூ
84. தோன்றிப் பூ
85. நந்திப் பூ
86. நறவம்(நறைக் கொடிப்பூ)
87. புன்னாகம் பூ
88. பாரம்(பருத்திப்பூ)
89. பீரம்(பீர்கம்பூ)
90. குருக்கத்திப் பூ
91. ஆரம்(சந்தனப்பூ)
92. காழ்வைப் பூ
93. புன்னைப் பூ
94. நரந்தம்(நாரத்தம்பூ)
95. நாகப்பூ
96. நள்ளிருநாறி(இருள்வாசிப்பூ)
97. குருந்தம் பூ
98. வேங்கைப் பூ
99. புழகுப் பூ.....


தமிழ்……இச்சொல்லை சொன்னதுமே உணர்ச்சிமேலிட்டு மேனிசிலிர்த்து நிற்பவர்கள் பலர்…! அந்த மொழிக்கு….அந்த மொழியை பேசுபவர்களுக்கு அப்படி ஒரு பெருமை….! இல்லாமலில்லை. எத்தனையோ பிரளயங்களைக்கண்டும், எத்தனை அழிவுகளைச்சந்தித்தும்,எத்தனை பண்பாட்டுப்படையெடுப்புக்களை எதிர்கொண்டும் அயர்ந்துபோகாது கம்பீரமாக நிற்கும் மொழி. இன்று செம்மொழி என்று கூறப்படும் மொழிகளில் 100 வீதம் செம்மொழிக்கான தகைமைகளைப்பூர்த்தி செய்து நிற்கும் மொழி. அம்மொழியைப்பேசுபவன் அதன் அருமை புரியாமல், ஒருபோது அதை வடமொழியோடு புணரவிட்டான். விளைவு? அன்று தமிழ்வளர்த்த சேரநாடு இன்று மலையாளம் என்ற புதுமொழியைத்தாங்கி நிற்கிறது. முன்பொருமுறை ஆரியமாயையில் சிக்கியிருந்தவன் இன்று ஆங்கில மாயையில் சிக்கி தமிழை ஆங்கிலத்தால் கற்பழிக்கவிட்டான். இன்று புதிதாக “தமிங்கிலீஷ்” எனும் மொழி உதயமாகியிருக்கிறது. தமிழ்கூறும் நல்லுலகை அது என்றைக்கு முற்றுமுழுதாக “ற்றமில் னாடு” ஆக்கப்போகிறதோ தெரியவில்லை.
ஆங்கிலம் முக்கியமில்லை என்று சொல்லவரவில்லை. ஆனால் ஆங்கிலத்திற்காக தாய்மொழியை விட்டுக்கொடுக்காதீர். நம் பழைய வரலாற்றை கொஞ்சம் திரும்பிப்பார்த்தால் உண்மையிலேயே மிகுந்த பெருமையாயிருக்கும். ஆனால் வீணே பெருமைப்படுவதிலோ வெறுமனே தமிழர்-தமிழ் என்று உணர்ச்சிவசப்படுவதிலோ அர்த்தமில்லை. அந்தப்பழங்கதைகளிலிருந்து பாடங்கள் கற்க வேண்டும். எழமுடியாத காயங்களுடன் வீழ்ந்து கிடக்கும் நாம், வீறுகொண்டு எழவேண்டும். அந்த வீறு, மெல்லத்தமிழினி….. என்று வெம்பிய பாரதியின் வரிகளை வெல்லவேண்டும். நாளைய சந்ததிக்கும் தேவையானதும் அதுவே!
இதில் குறிப்பிடப்படும் பெரும்பாலான விடயங்களை அறியத்தந்த தமிழ்

Thursday, August 30, 2012

ஈ.எஸ்.பி...........E.S.P (Extra Sensory Perception)



அதீத உள்ளுணர்வுத் திறன், கூடுதல் புலனறிவு, என்றெல்லாம் அழைக்கப்படும் E.S.P உலகெங்கிலுமுள்ள மனிதர்கள் பலருக்கும் வியப்பைத் தரும் ஒன்று.........

பின்னர் வருவதை, அல்லது நடக்கப் போகும் ஒன்றை முன் கூட்டியே அறிவதுதான் ஈ.எஸ்.பி. எனப்படுகிறது. பொதுவாக, ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் எல்லா மனிதருக்குமே ஓரளவு இருக்கிறது. ஆனால் பலரும் அந்த ஆற்றலின் மீது கவனம் செலுத்துவதில்லை. அல்லது அந்தத் திறனை வளர்த்துக் கொள்ளுவதில்லை. அதனால் பலரும் அது பற்ற
ிய உண்மைகளை அறியாமல் உள்ளனர். உதாரணமாக திடீரென நாம் நெருங்கிய நண்பர் ஒருவரைப் பற்றி அடிக்கடி நினைப்போம். அவரைப் பார்க்க வேண்டுமென நினைப்போம். திடீரென அவர் கண் முன்னே வந்து நிற்பார். அல்லது அவரைப் பற்றிய செய்தி நமக்கு வந்து சேரும். அல்லது போன் வரலாம். இதுதான் ஈ.எஸ்.பி. என்பதன் ஒருவித எளிமையான விளக்கம். இந்த ஈ.எஸ்.பியில் பல வகைகள் உள்ளன.

பிறருடைய எண்ணங்களை, அவர்கள் மனதில் உள்ள தகவல்களைப் படிக்கும் ஆற்றல் – டெலிபதி (Telepathy) எனப்படுகிறது.

எதிர்காலத்தை அவதானித்து, மிகச் சரியாக அதை முன்கூட்டியே கூற முடிவதற்கு – Precognition என்று பெயர்.

இருந்த இடத்தில் இருந்து கொண்டே வேறு ஒரு இடத்தில் நடக்கும் விஷயங்களை சரியாகக் கணித்துக் கூறுவதற்கு – Clairvoyance என்று பெயர்.

ஒரு நபரது கடந்த காலத்தை, சம்பவங்களை, வாழ்க்கை நிகழ்ச்சிகளை நேரில் பார்த்தது போல் மிகத் துல்லியமாகக் கூறுவதற்கு Retro cognition என்று பெயர்.

ஒரு நபருக்குச் சொந்தமான பொருளை தொடுவதன் மூலமோ அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட ஏதேனும் உடைமைப் பொருள் ஒன்றைக் கொண்டு அந்த நபர் பற்றி, அவர் இருக்கும் இடம், தன்மை, அவரது செயல்பாடுகள் பற்றிக் கூறும் திறனுக்கு Psychometric என்று பெயர்.

இதில் முக்கியமான விஷயம் ஈ.எஸ்.பி என்பது அமானுஷ்ய ஆற்றலோ அல்லது ஆவிகள் போன்றவற்றின் உதவியால் செயல்படுத்தப்படுவதோ இல்லை. முழுக்க முழுக்க மூளை மற்றும் மனத்தில் செயல்பாடுகளால் ஏற்படும் அதீத திறனே ஈ.எஸ்.பி. அதே சமயம் விஞ்ஞானிகளால் இது எப்படிச் செயல்படுகிறது, ஏன் ஒரு சிலருக்கு மட்டும் இந்த ஆற்றல்கள் அதிகமாக இருக்கிறது என்பதைக் கண்டறிய முடியவில்லை. இதை அவர்கள் நம்பினாலும் விஞ்ஞானபூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் Para-Psychology மற்றும் Para Normal என்ற வகையில் இதனை உள்ளடக்கி ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

பண்டைய புராணங்களில் ஈ.எஸ்.பி பற்றிய பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன. மகாபாரதத்தில், குருஷேத்திரப் போர் நடக்கும் காலத்தில், அரண்மனையில் இருந்து கொண்டே, பார்வையற்ற மன்னன் திருதராஷ்டிரனுக்கு அந்தப் போர் களத்தில் நடக்கும் காட்சிகளை சஞ்சயன் விவரித்தது Clairvoyance எனப்படும் இந்த ஈ.எஸ்.பி. ஆற்றலைக் கொண்டுதான்.

நாஸ்ட்ரடாமஸ் எதிர்காலத்த்தில் இந்த சமயத்தில், இன்னின்ன சம்பவங்கள் நடக்கும் என்பதை கணித்துக் கூறியதும் ஒரு விதத்தில் Precognition எனப்படும் இந்த ஈ.எஸ்.பி. ஆற்றலின் உதவியோடுதான். ஒரு சில ஜோதிடர்கள் அல்லது ஆரூடம் சொல்பவர்கள், தங்களைக் காண வரும் நபரின் கடந்த காலத்தை மிகத் துல்லியமாகவும், வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் தெளிவாகவும் கூறுவது Retrocognition என்ற ஈ.எஸ்.பி. ஆற்றலால் தான்.

உலகெங்கிலும் ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் மிக்கவர் பலர் உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் முன் அவர்கள் தங்கள் ஈ.எஸ்.பி ஆற்றலை நிரூபித்தும் காட்டியுள்ளனர்.

(தொடரும்).....

Sunday, August 26, 2012

"பெர்முடா முக்கோணம்"(bermuda triangle)



அறிவியலாலும் அவிழ்க்க முடியாத முடிச்சுகளில் ஒன்று தான் பெர்முடா முக்கோணம். வடஅட்லாண்டிக் பெருங்கடலில் பெர்முடா, மியாமி, போர்டோரிகோ ஆகிய மூன்று பகுதிகளையும் இணைத்தால் ஒரு முக்கோண வடிவம் கிடைக்கும். இந்த முக்கோண கடல் பகுதியை தான் “பெர்முடா முக்கோணம்" என்கின்றனர்..

இந்த பகுதியில் கப்பல்கள் காணாமல் போவதும் விமானங்கள் மறைந்துவிடுவதும் உண்டு. விடை தெரியாத சில இயற்கை வினோதங்களில் மிக மிக முக்கியமானது “பெர்முடா முக்கோணம்".
இந்த முக்கோண
பரப்புக்குள் வந்த கப்பல்கள், விமானங்கள் பல உரிய இடத்திற்கு போய் சேரவில்லை. புறப்பட்ட இடத்திற்கும் திரும்ப வரவில்லை. இவை அந்த முக்கோண பரப்புக்குள்ளேயே மாயமாக மறைந்து விடும்.ஏன் இந்த கப்பல்கள் இவ்வாறு காணமால் போகின்றன என்பதை ஆராய்வதற்காக 40 கப்பல்கள், 20 அதிநவீன விமானங்கள் சென்றன. ஆனால், அவற்றையும் காணவில்லை. 1872-ல் அந்த பகுதிக்குள் அப்பாவியாக தலை நீட்டிய மேரி செலஸ்டின் என்ற கப்பல்தான் முதன்முதலாக மாயமானது. தொடர்ந்து “மெடர்", “சைக்கேளாப்ஸ், கரோல்ஏடீரிஸ், கன்னிமரா போன்ற பிரமாண்ட கப்பல்களும், பிளைட் 19, ஸ்டார் டைகர் போன்ற போர் விமானங்களும் இந்த கடல் எல்லையின் மேல் மிதந்த மற்றும் பறந்த சுவடுகளே இல்லாமல் மாயமாகி விட்டன. இதனுள் பயணம் செய்த ஆயிரக்கணக்கான மக்களும் சுவடுகளே இல்லாமல் மாயமாகி விட்டன..

நடந்து என்ன? என்ற ஆராய்ச்சியில் நிபுணர்கள் களத்தில் குதித்தனர். வாலண்டைன் என்ற கடல் ஆராய்ச்சியாளர் கப்பல்கள் எங்கும் போகவில்லை. அவை எல்லாமே அங்குதான் வேறொரு பரிணாமத்தில் நிற்கின்றன என்று குழம்பினார். அமெரிக்கா விஞ்ஞானிகள் முக்கோண ஏரியாவுக்குள் கிடப்பொருட்கள் சின்னச்சின்ன அணுக்காளாக உடைந்து விடுவதால் பொருட்கள் மாயமாகி விடுகின்றன என்று கூறினார்கள்! ஏலியன்கள் (வேற்று கிரக மனிதர்கள்!) தாக்குதல், மிக அதிகமான புவியீர்ப்பு விசை, கடலின் நீரோட்டத்தில் இருக்கும் மின்னோட்டம் என்று ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னார்கள். ஆனாலும் பெர்முடா முடிச்சு அவிழ்ந்தபாடில்லை.

பெர்முடா முக்கோணத்திற்கு விடை கிடைக்காத நிலையில் அடுத்து பூதமாக ஜப்பானின் தென்கிழக்கு கடற்கரையில் செல்லும் கப்பல்கள் இப்போது காணமால் போக ஆரம்பத்திருக்கின்றன. ஜப்பான் விஞ்ஞானிகளாலும் இதனை கண்டுப் பிடிக்க முடியவில்லை. ஆனால், இந்த மர்மான பகுதிக்கு “டிராகன் டிரையாங்கிள்" என்று பெயரிட்டு கவலையோடு ஆராய்ந்து வருகின்றனர். எப்போதும் இந்த இரண்டு முக்கோண மர்மங்களுக்கும் விடை கிடைக்கும் என்பதுதான் புதிராகவே உள்ளது.

Thursday, August 9, 2012

லண்டன் ஒலிம்பிக் 2012


லண்டன் ஒலிம்பிக் 2012(ஜூலை 27...ஆகஸ்டு 12)


மனித இனம் ஒரு விதையிலிருந்து முலை விட்டிருந்தாலும் நாடு,மொழி,மதம் என பல பிரிவுகளாகத்தானே இருக்கிறது. இந்தப் பிரிவுகளை மறந்து ஒன்றிணைக்கும் கருவியாக இருப்பது விளையாட்டு.

பல்வேறு நாடுகளுக்குள் ஒவ்வ
ொரு விளையாட்டுக்கும் ஒரு குழு இருந்தாலும் ஏறத்தாழ எல்லா நாடுகளும் பங்கேற்கும் உலகளாவிய விளையாட்டு விழா ஒலிம்பிக் மட்டும்தான்.

கி.மு.776 ஆம் ஆண்டு பண்டைய கிரேக்க நாட்டில் தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள் இன்று உலகை இணைக்கும் விளையாட்டாக உலக மக்களால் கொண்டாடப்படுகிறது.

5 வளையங்கள் ஒன்றுக்குள் ஒன்றாக இணைந்திருப்பது ஒலிம்பிக்கின் சின்னம்.5 வளையங்கள் 5 கண்டங்களைக் குறிப்பதாகும்.

இந்த ஆண்டு நடைபெறப்போவது 30 ஆவது ஒலிம்பியாட் ஒலிம்பிக் போட்டி என்று அழைக்கப்படுகிறது.இங்கிலாந்து நாட்டின் தலைநகரம் லண்டன் மாநகரில்,இந்த ஜூலை மாத 27 ஆம் நாள் தொடங்கி ஆகஸ்டு 12 ஆம் நாளன்று முடிகிறது.

இதற்கு முன் இதே லண்டன் மாநகரில் 1908 மற்றும் 1948 ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளன.இம்முறை நடைபெறுவது மூன்றாம் முறையாகும்.

இந்தத் தலைமுறைக்கு ஊக்கம் அளித்தல் என்ற முழக்கத்தோடு நடக்கவுள்ள இப்போட்டி களில் 203 நாடுகள் பங்கேற்கின்றன. இந்நாடுகளில் இருந்து தோராயமாக 10,500 விளையாட்டு வீரர்கள் தங்களது திறமையைக் காட்ட இருக்கிறார்கள்.


வில்வித்தை, ஓட்டப்பந்தயம், பூப்பந்து, கூடைப்பந்து, கடற்கரைக் கைப்பந்து, குத்துச்சண்டை, படகுஓட்டுதல், சைக்கிள்பந்தயம், நீச்சல், குதிரைஓட்டுதல், கத்திச்சண்டை, கால்பந்து, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, ஹாக்கி, ஜூடோ உள்ளிட்ட 36 விளையாட்டுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளது.


ஒலிம்பிக் என்றவுடனே எல்லோர் நினைவுக்கும் வருவது ஒலிம்பிக் சுடர்தான். மே மாத 19 ஆம் நாள் இங்கிலாந்தின் செனென் என்ற நகரிலிருந்து தொடங்கி விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவராக ஏந்திய படி ஒலிம்பிக் சுடர் லண்டனை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

ஏறத்தாழ 8 ஆயிரம் வீரர்களின் கைகளில் மாறி மாறி இந்தச் சுடர் சுமார் 1,000 நகரங்கள் மற்றும் இயற்கை அழகு கொஞ்சும் சிற்றூர்கள் வழியாக ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் மைதானத்தை ஜூலை 27 அன்று வந்தடைய உள்ளது.



இந்த முறை ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தை இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்து அசத்திக் கொண்டிருக்கிறார்கள்.நீங்கள் இணையதளத்தில்http://www.london2012.com/torch-relay/video/live.html என்ற முகவரியில் இப்பொழுதுகூடப் பார்க்கலாம். எந்த ஊரில் சுடர் வந்துகொண்டிருக் கிறது.

அதனை யார் ஏந்தி வருகிறார்கள் என்பதை அறியமுடியும். இங்கிலாந்து மக்கள் சிறுவர்,சிறுமியர் உள்பட சாலையின் இருபுறமும் காத்திருந்து, ஒலிம்பிக் சுடர் ஏந்தி வரும் வீரருக்கு வாழ்த்துத் தெரிவித்து வரவேற்கிறார்கள்.

ஒலிம்பிக் போட்டியைக் காண வரும் உலக மக்களை வரவேற்கும் பாடல் ஒன்றைக் காட்சிப்படுத்தி காணொளியாக வெளியிட்டுள்ளார்கள். இதில் ஒரு சிறப்பு என்ன தெரியுமா? பாடலின் தொடக்கத்திலேயே ஒரு தமிழ்ச் சிறுவன் வணக்கம் என்று துள்ளிக்குதித்துக் கூறுகிறான்.அவனைத்தொடர்ந்து பல்வேறு மொழிச் சிறுவர்கள் தத்தம் தாய் மொழிகளில் வணக்கம் கூறுகிறார்கள்.

லண்டனில் உள்ள ஸ்டார்ட்போர்டில் ஒலிம்பிக் விளையாட்டு அரங்கம் ரூ3,400 கோடி செலவில் 2007 ஆம் ஆண்டு கட்டத்தொடங்கி 2011 ஆண்டில் திறக்கப்பட்டுள்ளது.

இதில் 80 ஆயிரம் பேர்வரை ஒரே நேரத்தில் அமர்ந்து போட்டிகளை ரசிக்கலாம்.இநத அரங்கம் முழுவதும் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருள்களால் ஆனது.

லண்டன் இப்போதே களைகட்டிவிட்டதாம். நம்மால் நேரடியாக லண்டனுக்கு சென்று பார்க்கமுடியவில்லையென்றாலும் இணையத்தின் வாயிலாகவும்.தொலைக்காட்சி வாயிலாகவும் நேரலையில் பார்த்து ரசிக்கலாமே.

Tuesday, August 7, 2012

பத்துமலைக் குகை முருகன் கோயில்


(( வேல் தாங்கிய கரமும், புன்னகை பொழியும் விழிகளும் கொண்டு 147 அடி உயரத்துடன் கம்பீரமாகக் காட்சிதரும் இந்த முருகன் சிலைதான் உலகின் மிகப்பெரிய முருகன் சிலை ))

மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் (இந்துக்கள்
) மட்டுமின்றி சீனர்களும் வந்து வழிபடக்கூடிய கோயில்களில் ஒன்று பத்துமலைக் குகை முருகன் கோயில். இந்தக் கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை அடுத்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இங்குள்ள முருகப் பெருமான் சுப்பிரமணிய சுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

((இந்த கோயில் வரலாறு))
மலேசியாவின் பத்துமலையிலுள்ள சிறிய குகையில் வேல்மாதிரி உருவம் கற்பாறையில் தெரிவதைக் கண்ட ஒரு தமிழ்ப்பக்தர் ஒரு மூங்கிலை நிறுவி அதை வேலாகக் கருதி வழிபட்டு வந்தார். பிறகு உலோகத்திலான வேல் நிறுவப்பட்டு முருகப் பெருமானுக்கு ஆலயம் அமைக்கப்பட்டது என்கிறார்கள்.இந்த பத்துமலையில் இரு குகைகள் உள்ளது. ஒன்று மிக ஆழமாகச் செல்வது, மிகவும் இருண்டது. மற்றொரு குகையில்தான் முருகன் கோயில் கொண்டிருக்கிறார்.

இந்த பத்துமலைக் குகை முருகன் கோயில் 1891ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டிருக்கிறது. அப்போது இந்த முருகனைத் தரிசிக்க கரடுமுரடான பாதையில் செல்ல வேண்டியிருந்தது. அதன் பின்பு 1938 ஆம் ஆண்டில் இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல 272 படிக்கட்டுகளைக் கொண்ட மூன்று நடைபாதைகள் அமைக்கப்பட்டது. இது தவிர தனியே இரயில் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழிகளைப் பயன்படுத்தி தரையிலிருந்து 400 அடி உயரத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று சுப்பிரமணிய சுவாமியான முருகப் பெருமானைத் தரிசித்து வரலாம்.

((மிகப் பெரிய முருகன் சிலை))
தற்போது இந்தக் கோயிலுக்குச் செல்லும் பாதைகளுக்கு முன்பாக, அதாவது நுழைவு வாயிலின் அருகில் தங்கம் போல் தகதகவென மின்னும்படியாக வர்ணம் பூசப்பட்ட மிகப் பெரிய முருகன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய வேலை வலது கையில் தாங்கி நிற்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையின் உயரம் 42.7 மீட்டர், அதாவது 140.09 அடி. இந்த சிலை அமைக்க 2003 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட பணி 2006 ஆம் ஆண்டில்தான் நிறைவு பெற்றது. இந்த சிலை அமைக்க 2006 ஆம் ஆண்டில் இந்திய மதிப்பில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவாகி இருக்கிறது. இந்த சிலை அமைப்பிற்கான கட்டுமானப் பொருட்கள் அதிகமாக பக்கத்து நாடான தாய்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கிறது. உலகின் மிகப்பெரிய முருகன் சிலையாக அமைக்கப்பட்ட பின்பு இந்த பத்துமலைக் குகை முருகன் கோயிலுக்கு வருபவர்கள் எண்ணிக்கையுடன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

((சிறப்பு விழா))
இங்கு வருடந்தோறும் தை மாதம் வரும் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் தைப்பூச விழாவில் இந்துக்கள் தவிர சீனர்கள் மற்றும் வேறு சிலரும் இங்குள்ள புனித ஆற்றில் நீராடிவிட்டு, முருகன் கோயில்களில் நேர்த்திக் கடன்களாகச் செய்யப்படும் அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற பலவிதமான நேர்த்திக் கடன்கள் இங்கும் இருக்கிறது.
ஆனால் இங்கு தமிழர்களைத் தவிர சீனர்கள் மற்றும் பிற மதத்தைச் சார்ந்தவர்களும் முருகனுக்கு வேண்டிக் கொள்வதும் நேர்த்திக்கடன் செலுத்துவதும் ஆச்சர்யமான ஒன்றாகும்.

Tuesday, July 17, 2012

1943இல், அப்போது இலங்கை..........

1943இல், அப்போது இலங்கையை ஆண்ட பிரித்தானிய அரசால் வெளியிடப்பட்ட நாணயம்…. அதிலுள்ள தமிழை வாசித்துப் பாருங்கள்…
“௫0 சதம்” (50 சதம்) என பொறிக்கப்பட்டுள்ளது. 1872.01.01இலிருந்து இலங்கையில் ரூபா மற்றும் சதம் ஆகிய நாணயங்கள் வெளியிடப்பட ஆரம்பிக்கப்பட்டது. சுதந்திரத்துக்கு முன்வரை நம் நாட்டிலும் தமிழ் எண்கள் புழக்கத்திலிருந்துள்ளன என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்???


இந்தி, கன்னடம், அரபு போன்ற மொழிகளில், இன்றும் அவ்வவ் மொழிகளிலுள்ள இலக்கங்களே வழக்கிலுள்ளன.. அவற்றுக்கெல்லாம் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய, தமிழர் நாம் மட்டும், நம் சுயத்தை இழந்து, புது எண்களைக் கடைப்பிடிக்கிறோம் வெட்கமாக இல்லை???

அந்தப் புதுஎண்கள் கூட நம் தமிழ் எண்களிலிருந்து பிறந்தவை தாம், இங்கு சென்று பாருங்கள்:
http://sivaakaran.blogspot.com/2012/05/123.html

Wednesday, July 4, 2012

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை அறிந்து கொள்வது எப்படி??

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை “பட்டைப் பரிபாடை” (Bar Code) மூலம் அறிந்து கொள்வது எப்படி??


சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது உலகமே சந்தேகம் கண் கொண்டு பார்க்க ஆரம்பித்தாயிற்று! …பால்மா பிரச்சனை,சீன பொம்மைகள், சேய் மகிழ்விகள் (Toys) என்று அனைத்திலும் நச்சு பொருட்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைக்கிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள். அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.(தவிர்ப்பதற்கும்சரி வாங்குவதற்கும் சரி ;)

சீன,தாய்வான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது எப்படி?

இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பட்டைப்பரிபாடை (Bar Code) பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும். பட்டைப்பரிபாடை
என்பது பொறி வாசிப்பு வடிவமைப்பில் (machine readble format) இருக்கும்.

அதில் முதல் மூன்று எண்கள் 690, 691, 692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று பொருள்!

471 என்றால் தாய்வானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.போலி மருந்துகள் மாதிரி போலியாக, இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது.இனிமேல் Bபார் கோட்டை பார்த்து வாங்குங்க :).


மற்ற நாடுகளின் பட்டைப் பரிபாடை (Bar Code) முதல் எண்கள் :-

00-13: USA & Canada
20-29: In-Store Functions
30-37: France
40-44: Germany
45: Japan (also 49)
46: Russian Federation
471: Taiwan
474: Estonia
475: Latvia
477: Lithuania
479: Sri Lanka
480: Philippines
482: Ukraine
484: Moldova
485: Armenia
486: Georgia
487: Kazakhstan
489: Hong Kong
49: Japan (JAN-13)
50: United Kingdom
520: Greece
528: Lebanon
529: Cyprus
531: Macedonia
535: Malta
539: Ireland
54: Belgium & Luxembourg
560: Portugal
569: Iceland
57: Denmark
590: Poland
594: Romania
599: Hungary
600 & 601: South Africa
609: Mauritius
611: Morocco
613: Algeria
619: Tunisia
622: Egypt
625: Jordan
626: Iran
64: Finland
690-692: China
70: Norway
729: Israel
73: Sweden
740: Guatemala
741: El Salvador
742: Honduras
743: Nicaragua
744: Costa Rica
746: Dominican Republic
750: Mexico
759: Venezuela
76: Switzerland
770: Colombia
773: Uruguay
775: Peru
777: Bolivia
779: Argentina
780: Chile
784: Paraguay
785: Peru
786: Ecuador
789: Brazil
80 – 83: Italy
84: Spain
850: Cuba
858: Slovakia
859: Czech Republic
860: Yugoslavia
869: Turkey
87: Netherlands
880: South Korea
885: Thailand
888: Singapore
890: India
893: Vietnam
899: Indonesia
90 & 91: Austria
93: Australia
94: New Zealand
955: Malaysia
977: International Standard Serial Number for Periodicals (ISSN)
978: International Standard Book Numbering (ISBN)
979: International Standard Music Number (ISMN)
980: Refund receipts
981 & 982: Common Currency Coupons
99: Coupons


Friday, June 1, 2012

புரட்சியின் மறுவடிவம் – நெல்சன் மண்டேலா!






நெல்சன் மண்டேலா அவர்கள் தென் ஆபிரிக்காவில் கியுசெ என்னுமிடத்தில் 1918 யூலை 18 ஆம் திகதி பிறந்தார். தந்தையார் அரச தொழில் புரிபவராக இருந்தமையினால் உயர்கல்வி கற்று சட்ட வல்லுநர் ஆனார். 1939 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்து, ‘கறுப்பின மக்கள் அடக்கப்படுகின்றனர். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. அவர்கள் பிரயாணம் செய்வதற்கு அவர்களுடைய நாட்டினுள்ளேயே அனுமதி பெற வேண்டியுள்ளது. நிலவுடமையாளர்களாக கறுப்பின மக்கள் இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இவை சுதேச மக்களுக்கு எதிரானவை. நீதியற்றவை. இவற்றிற்கு எதிராக நாம் போராட வேண்டும்” என அறை கூவி கறுப்பின மக்களை விழிப்படையச் செய்வதில் வெற்றி கண்டார்.



தென் ஆபிரிக்க கறுப்பின மக்களின் தேவைக்காக முதன் முதலாக வழக்குறிஞர் ஒலிவர் தம்போவுடன் இணைந்து வழக்கறிஞர் அலுவலகம் ஒன்றை உருவாக்கி கறுப்பின மக்களை ஒன்று திரட்டி வெள்ளையர்களின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை நடாத்தி அதில் வெற்றியும் கண்டார்.



இவரது வன்முறையற்ற போராட்டம் வளர்ச்சியடைவதை அவதானித்த வெள்ளையர் அரசு 1956 இல், அரசுக்கு எதிராக புரட்சி செய்தார் என கைது செய்தது. சிறையில் இருந்து வெளிவந்த மண்டேலா தீவிரமாக செயற்பட்டார். இதன் காரணமாக 1960 களில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வேகமாக வளர்ச்சியடைந்தது. 1960 இல் ஆபிரிக்கர்களுக்கு விசேட கடவுச்சீட்டு வழங்குவதற்கு எதிராக ஊர்வலம் ஒன்றை Sharpeville நகரில் நடாத்தினர். பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 69 பேர் கொல்லப்பட்டனர். (இது 1958 களில் எம்மவர்கள் காலிமுகத் திடலில் உண்ணாவிரதம் இருந்தபோது சிங்களக் காடையர்களால் மிருகத் தனமாகத் தாக்கப்பட்டதை ஒத்திருப்பதை காணலாம்.)



இதனையடுத்து சாத்வீக வழிமுறைகள் ஊடாகப் போராடி உரிமைகளைப் பெற முடியாதென்பதை உணர்ந்து கொண்ட மண்டேலா ஆயத வழிமுறையை நாடினார். இதனையடுத்து அவரைக் கைது செய்ய வெள்ளையாட்சியினர் முடிவு செய்தனர். திட்டமிட்டபடி 1963 இல் மண்டேலா உட்பட 10 முக்கிய ANC [ African National Congress ]தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைந்தது வெள்ளை அரசு. அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தமை, அமைதியைக் குலைத்தமை கலகத்தை உருவாக்கியமை என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப் பட்டன. இவ்வழக்கு 1963 இல் றிவோனியா செயற்பாடு (process Rivonia) எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.



இவ்வழக்கு விசாரணையின் போது மண்டேலா அவர்கள், ‘நான் எனது வாழ்க்கை முழுவதையும் தென் ஆபிரிக்க மக்களின் உரிமைக்காகப் போராடுவதற்கு அர்ப்பணிக்கத் தயாராகவே இருக்கின்றேன். வெள்ளை இனத்தவரின் மேலாதிக்கத்திற்கு எதிராகவும் கறுப்பின மக்களின் உரிமைக்காகவும் போராடுவேன்” எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

இவ்வழக்கு 1964 இல் முடிவடைந்த போது வெள்ளையரின் நீதிமன்று அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தமையைக் காரணம் காட்டி மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. அவர் தனது ஆயுள் தண்டனையை றொப்பன் தீவில் அனுபவித்திருந்தார். அவரது கைதி இலக்கம் 466/64. 27 வருட கொடுஞ் சிறைவாசத்தின் பின் 1990 ஆண்டு மாசி மாதம் 11 ஆம் திகதி மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.



1990 இல் அவர் விடுதலை செய்யப்பட்டமைக்கு உலக பொருளாதார, அரசியல் அரங்கில் ஏற்பட்ட மாறுதல்கள் காரணம் எனக் கூறலாம். சோவியத் யூனியன் பல சிறுதுண்டுகளாக பிளவுபட்டமை முக்கிய காரணம் எனலாம். இதன் காரணமாக மேற்குலக நாடுகள் கம்யூனிசவாதம் முடிவுக்கு வந்துவிட்டதை உறுதிப்படுத்திய நிலையில் யதார்த்த ஜனநாயக முரண்பாடு கொண்ட தென் ஆபிரிக்க வெள்ளையர் அரசுக்கான தமது ஆதரவை வலுப்படுத்த முன்வரவில்லை. மூன்றாம் உலக நாடுகள் பல தென் ஆபிரிக்காவுடனான தொடர்பை முன்னரே துண்டித்து இருந்தமையாலும் தென் ஆபிரிக்க வெள்ளையர் அரசானது சுதேச கறுப்பின மக்களுடன் ஓர் உடன்பாட்டிற்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இல்லையேல் இன்று தென் ஆபிரிக்க வெள்ளையர்கள் சிம்பாப்வேயில் வாழ்ந்த வெள்ளையர்களின் நிலைக்கு வந்திருக்க வேண்டி இருந்திருக்கும் என்றும் அன்றைய தென் ஆபிரிக்க வெள்ளையர் அரசு உணர்ந்திருந்தது.



விடுதலை செய்யப்பட்ட நெல்சன் மண்டேலா அவர்கள் உலக ஜனநாயகவாதத்தின் சின்னமாகவே தெரியப்பட்டார். உலக நாடுகள் பலவற்றின் அழைப்பை ஏற்று உலக மக்களைக் கவர்ந்த ஓர் மா மனிதராக வலம் வந்தார். யூதர்கள் அதிகமாக வாழ்கின்ற நியூயோர்க் நகரில் பாலஸ்தீன மக்களுக்கு அவர்களுடைய பிரதேசத்தில் ஜனநாயக உரிமை வழங்கப்பட வேண்டும் என துணிவுடன் உரையாற்றி உலகத் தலைவர்களின் அணியில் முதன் நிலைக்கு உயர்த்தி புகழப்பட்டார். தென் ஆபிரிக்க மக்களுக்காக 27 வருடங்கள் கொடுஞ்சிறையில் வாழ்வை அர்ப்பணித்த விடுதலை வீரன் இன்னும் பல ஆண்டுகள் இப்பூமியில் நலமுடன் வாழ நாமும் வாழ்த்துவோம்.



உண்மையில் அமெரிக்க ஆட்சியாளர்களின் கோர முகத்தை உற்று நோக்கினால் அமெரிக்க அரசின் ஜனநாயகப் பயங்கரவாதத்தை இலகுவில் அடையாளம் காணலாம். உலகின் பயங்கரவாதிகள் எல்லோரும் அமெரிக்காவின் உற்ற நண்பர்கள். பாகிஸ்தான் இராணுவ ஆட்சியாளர்கள் உலகின் பயங்கரவாதத்திற்கு துணை போபவர்கள். அமெரிக்காவின் உற்ற நண்பர்கள் இதேபோல் மத்தியகிழக்கு இஸ்ரேல் அரசு, சிலியின் முன்னாள் சர்வாதிகாரி அகஸ்ரினோ பினாச்சே என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். ஏன் அல் கைடாவின் பின்லாடன் கூட சி.ஐ.ஏ. இன் நெருங்கிய நண்பனே.



கேவலம் என்ன என்றால் இன்றும் கூட பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்படுகின்றமையை அங்கீகரிக்கின்ற அல்லது ஆதரவு வழங்குகின்ற முதலாவது நாடு அமெரிக்காதான். காசா பிரதேசத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசை இயங்க விடாமல் தடுத்த பெருமையும் அமெரிக்காவையே சேரும். இலங்கைத் தமிழ் மக்கள் மீது சிங்கள அரசு விமானத்திலிருந்து குண்டு வீச கனவிலும் நினைவிலும் உதவுபவரும் இவரேயாவார். உலகின் ஜனநாயகப் போராட்டங்களை பயங்கரவாதப் பட்டியலிடும் இந்த அமெரிக்காவை விட வேறு யாரையும் இவ்வுலகில் குறிப்பிட முடியாது.

எவ்வளவு நாட்கள் சிந்தித்தார்களோ தெரியாது. இப்பொழுது மண்டேலா அவர்களை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். மேற்கத்தைய வெள்ளை இனத்தவர்கள் இந்த மனோநிலையில் இருந்து விடுபட இன்னும் எவ்வளவு காலம் செல்லும் என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் நியாயமான ஜனநாயகப் போராட்டங்கள் வெற்றியை அடைந்துள்ளன. அமெரிக்காவுக்கு தென்னாபிரிக்கா ஒரு முதல் பாடம் மட்டுமே. எமது விடுதலைப் போராட்டம் அடுத்த அத்தியாயம்.



1994 இல் தென்னாபிரிக்கா கறுப்பின மக்களுக்கு முதன் முதலாக வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டபோது தென் ஆபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக மண்டேலா தேர்ந்தெடுக்கப்பட்டார் இங்கும் கூட தென் ஆபிரிக்க வெள்ளையர்கள் அரசியல் மாற்றத்தை தமக்கு பாதகமில்லாமல் தேர்தல் மூலம் மாற்றி அமைத்தமையை நாம் அவதானிக்கலாம். ஏனெனில் வெள்ளையின வேட்பாளர் எப். டபிள்யூ. டி கிளார்க் தேர்தலின் வெற்றி பெற மாட்டார் என தெரிந்திருக்கும் தேர்தலை நடாத்தி அதனூடாக கறுப்பின மக்களிடம் ஆட்சி அதிகாரத்தைக் கை மாற்றிக் கொடுத்ததன் மூலம் சிம்பாப்வேயில் வெள்ளை இன நிலச்சுவாந்தர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை தவிர்த்துக் கொண்டதை வெள்ளை இனத்தவர்களுக்கான வெற்றி என்றே கொள்ளலாம்.



திரு. மண்டேலா அவர்கள் 1999 இல் தனது முதலாவது ஜனாதிபதி பதவிக் காலம் முடிவுற்ற நிலையில் அரசியலில் இருந்து விலகிக் கொண்டார்.மண்டேலா அவர்களின் 90 ஆவது வயதில் அமெரிக்க அரசனானது அவருக்கு எதிரான தடைகளை நீக்;கியதாக அறிக்கை வெளியிட்டு உலகை வியப்பில் ஆழ்த்தியது. நெல்சன் மண்டேலா ஒரு பயங்கரவாதி அவருடைய அமைப்பான ANC யும் பயங்கரவாதத்திற்கு உதவும் அமைப்பு என 1950 களில் அமெரிக்க செனட் சபை அறிவித்து தடை விதித்திருந்தது.



செனட் சபையால் பயங்கரவாதி என பட்டியலில் உள்ளவர்கள் அமெரிக்காவிற்கு செல்ல முடியாது. ஆனால் 1990 – 1994 காலப் பகுதியில் மண்டேலா அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். நியூ யோர்க் நகரில் இலட்சக்கணக்கான வெள்ளை இன மக்கள் மத்தியில் உரையாற்றினார். அது எப்படிச் சாத்தியமானது என அமெரிக்கா விளக்கமளிக்கவில்லை. நியூ யோர்க் நகரில் உரையாற்றிய போது மண்டேலா அவர்கள் அமெரிக்க சட்டப்படி ஒரு பயங்கரவாதி.

எது எப்படி இருப்பினும் கறுப்பினச்; சிங்கம் என வர்ணிக்கப்படும் நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை உரிமைகளுக்காகப் போராடுகின்ற மக்களுக்கு ஒரு ஆத்ம பலம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை

Monday, May 21, 2012

சேகுவேரா: புரட்சி நாயகனின் வரலாற்று அசல்!



சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ட்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) ஜுன் 14 1928 அக்டோபர்-9,1967(அர்ஜெண்டினாபிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்கு கொண்ட போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.

மார்க்ஸியத்தில் ஈடுபாடு

மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும்போது சே இலத்தீன் அமெரிக்கா முழுவதும் கடினம் மிக்க பயணங்களை மேற்கொண்டிருந்தார். அப்பயணங்களின்போது அங்கு நிலவிய வறுமையின் தாக்கத்தினை நேரடியாக உணர்ந்திருந்தார். இந்த அனுபவங்கள் மூலம் அப்பிரதேசத்தில் இருந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு புரட்சி மூலமே தீர்வு காணமுடியும் என சே நம்பினார். இது சே மார்க்சியம் கற்றுக்கொள்ளவும் குவாட்டமாலாவில் நடைபெற்ற சோசலிசப் புரட்சியில் ஈடுபடவும் வழிவகுத்தது.

கியூபாவில் புரட்சி

சில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடம் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அக்காலகட்டத்தில் கரந்தடி போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.

பொலிவியாவில் சேகுவேரா


பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் அக்டோபர் 9-1967 இல் சே குவேரா கொல்லப்பட்டார். சாட்சிகள் மற்றும் கொலையில் பங்கு பெற்றவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது.கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார்.தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது)

அவரது மரணத்தின்பின், சே குவேரா உலகிலுள்ள சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக கொண்டாடப்படுகிறார். சே 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தான். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று நம்பப்படுகிறது.

அமெரிக்கா பொலிவியாவைவிட கரிப்பியன் பேசின் நாடுகளே தங்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்று நம்பியதும், அதனால் அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அவ்வளவு தீர்க்கமாக விழவில்லை என்பதும் ஒரு காரணம் . இரண்டாவதாக பொலிவியாவின் ஏழ்மையும் அங்கு நிலவிய சமூக மற்றும் பொருளாதார நிலைகளும் எந்நேரமும் அங்கு புரட்சி வெடிக்க சாதகமாக இருந்தது . மூன்றாவதாக பொலிவியா ஐந்து பிற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்தது .

பொலிவியாவில் கொரில்லாப் போராட்டம் வெற்றி பெறுமேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவச் செய்துவிடலாம் என்று குவேரா நினைத்தது. (ஆனால் ஃபிடெல் காஸ்ட்ரோ தன்னை வஞ்சித்து விட்டதாக சே குவேரா மிகவும் வருந்தியதாக 1998ம் ஆண்டு ஓய்வு பெற்ற பொலிவிய ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நினோ டி குஸ்மான் என்ற அந்த அதிகாரி குவேராவை சுட்டுக் கொல்வதற்கு முன்பு அவனிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது சே அவனுடைய மனக்குமுறலை வெளியிட்டதாகவும் கூறினார்.

தான் பெரு நாட்டில் புரட்சி செய்ய முடிவெடுத்ததாகவும் ஆனால் காஸ்ட்ரோ தான் தன்னை வற்புறுத்தி பொலிவிய நாட்டில் கலகம் விளைவிக்கக் கூறியதாகவும் சே குவேரா கூறியதாக தகவல் வெளியாயிற்று !!!! மேலும் சே குவேரா பெரு நாட்டின் விவசாயிகள் தன்னுடைய புரட்சிக்கு ஆதரவு கொடுத்திருப்பார்கள் என்றும் பொலிவிய நாட்டில் விவசாய மறுமலர்ச்சி திட்டத்தால் மக்கள் அவ்வளவு அதிருப்தியடையாததால் அவர்களின் ஆதரவு எதிர்ப்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறியதாக அந்த அதிகாரி கூறியிருந்தார்.

இளமைக்காலம்

சே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் அர்ஜெண்டினாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். ஸ்பானிய ,பாஸ்க்கு,ஐரிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.

வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த “ரக்பி” விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை “பூசெர்” என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு “பன்றி” என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.

தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வளர்ந்த பின்பும், பின்னர் வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடா, கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்கள் மீது இவருக்குச் சிறப்பு ஆர்வம் இருந்தது.

குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள், மார்க்ஸ்,போல்க்னா,கைடே,சல்காரி,வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேரு, காப்கா,காமுஸ்,லெனின் போன்றவர்களது நூல்களையும், ஏங்கெல்ஸ்,வெல்ஸ்,புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார்.அவரது வயது அதிகரித்த போது, அவருக்கு லத்தீன் அமெரிக்

எழுத்தாளர்களானகுயிரோகா,அலெக்ரியா,இக்காசா,டாரியோஆஸ்ட்டுரியாஸ் போன்றோருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. செல்வாக்கு மிக்க தனி நபர்களின் கருத்துருக்கள், வரைவிலக்கணங்கள், மெய்யியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதிவந்த குறிப்புப் புத்தகத்தில் இவர்களுடைய கருத்துக்களையும் அவர் குறித்து வந்தார். இவற்றுள், புத்தர் அரிஸ்ட்டாட்டில் என்போர் பற்றிய ஆய்வுக் குறிப்புக்கள், பேட்ரண்ட் ரஸ்ஸலின் அன்பு, தேசபக்தி என்பன குறித்த ஆய்வு, ஜாக் லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள், நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின் ஆக்கங்களாலும் கவரப்பட்ட சே குவேரா, அவரைப் பல வேளைகளில் மேற்கோள் காட்டியுள்ளார்.

1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவன்ஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி “மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்” (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.

பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார். பயணத்தின் முடிவில், இவர், இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜெண்டீனாவுக்குத் திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாப் பட்டம் பெற்றார்.

1953 ஜூலையில் மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலிவியா,பெரு,ஈக்குவிடார்,பனாமா,கொஸ்தாரிக்கா,நிக்கரக்குவா,ஹொண்டுராஸ், சல்வடோ ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ்குஸ்மான் என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட (latifundia) முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார்.

குவாத்தாமாலா நகரில், சே குவேராவுக்கு ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு (American Popular Revolutionary Alliance) என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக் காலத்திலேயே “சே” என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. “சே” என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்….

Friday, May 18, 2012

தமிழர்கள் பயன்படுத்தியுள்ள புழக்கத்தில் இல்லாத பெறுமதியுடைய எண்பெறுமானங்கள்.........

10இன் 12ஆம் அடுக்கு த்ரில்லியன் என்பதுவரை நாம் அறிந்திருக்கிறோம். மிஞ்சி மிஞ்சிப்போனால் 10இன் 15ஆம் அடுக்கு ஒரு ஸில்லியன் என்பது வரையாவது தெரிந்திருக்கலாம். ஆனால் இங்கே பாருங்கள் தமிழரின் கணித அறிவை…! 10 இன் 22ஆம் அடுக்கு வரையான எண்களைப் ப...யன்படுத்தியுள்ளனர்!! செல்வக்கடவுளான குபேரனிடம் சங்கநிதி, பதுமநிதி எனும் இருசெல்வங்கள் உண்டென்று சிலர் அறிந்திருப்பீர்கள். அதன் அர்த்தம் இதுதான்…அவனிடம் ஒரு ஸில்லியன்-நூறு த்ரில்லியன் அளவான செல்வம் இருந்ததாம்!!! (யதார்த்தத்துக்கு இக்கதை எப்படி ஒத்துவருமோ தெரியாது, ஆனால் இவ்வெண்களை கணிப்பில் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதையாவது ஊகிக்கமுடிகிறதல்லவா?) ஆங்கிலத்தில்,ஏன் இன்றைய வர்த்தக உலகில் கூட புழக்கத்தில் இல்லாத பெறுமதியுடைய எண்பெறுமானங்களை அன்றைய தமிழர்கள் பயன்படுத்தியுள்ளார்கள் என்றால் அவர்தம் கணித வல்லமையையும் வளச்செழிப்பையும் சற்று கற்பனை பண்ணிப்பாருங்கள்?

தொடரும் ...............

Tuesday, May 15, 2012

ஆதிச்சநல்லூர்

கடல்கொண்ட குமரிக்கண்டம் ..............

தமிழன் தெரிந்துகொள்ளவேண்டிய தன் இனத்தின் பெருமை!!
அதை உலகிற்கே உரக்க சொல்லவேண்டியது ஒவ்வோர் தமிழனின் கடமை!!!

உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைக்கிறது தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர்.


தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த ஆதிச்சநல்லூர், ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர். ஆச்சரியமாக இருக்கிறதா?..ஆம் அதுதான் உண்மை. இந்த இடுகாடு. கி.மு பத்தாம் நூற்றாண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது.

தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே. ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான்.

1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார்.

இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும்.

1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.

இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என நினைக்கிறீர்களா? அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான். "மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர் . பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.

மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது.


1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.

மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்.

அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே திராவிடர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.

ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார்.

ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.

ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால். "எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்" எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான். இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்னை.

இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.

நன்றி : TAMIL - தமிழ் ( பேஸ்புக் பக்கம்)

இராமாயண கால சிதைவுகள் video
கடல்கொண்ட குமரிக்கண்டம் .............

Saturday, May 12, 2012

எகிப்தில் தமிழ்........part 2

எகிப்தில் தமிழ்........part 1

த‌மிழ் பிராமி லிபிக‌ள் பொறிக்க‌ப்ப‌ட்ட‌ ஓர் உடைந்த‌ சாடியொன்று அண்மையில் எகிப்தில் க‌சீர் அல் க‌டீம் எனும் செங்க‌ட‌லின் க‌ரையோர‌ம் அமைந்துள்ள‌ ப‌ழ‌ங்கால‌ ரோமானிய‌ர்க‌ளின் வ‌சிப்பிட‌த்தில், அக‌ழ்வாராய்ச்சியின் மூல‌ம் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு வ‌ழி இவ்வெழுத்துக‌ள் கி.மு முத‌லாம் நூற்றாண்டைச் சார்ந்த‌வையாக‌ இருக்கும் என‌வும் இது ஒரு ம‌கிழ்ச்சியூட்டும் க‌ண்டுபிடிப்பு என‌வும் வேதியிய‌லாள‌ர்க‌ள் கூறுகிறார்க‌ள்.

இத்த‌மிழ் பிராமி லிபிக‌ள் சாடியின் இருபுற‌த்தில் இருமுறை பொறிக்க‌ப்ப‌ட்டு காட்சிய‌ளிக்கின்ற‌ன‌. பொறிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ எழுத்துக‌ள்'பானை ஒரி' (பானையை தொங்க‌விடுவ‌த‌ற்காக‌ க‌யிற்றால் நெய்ய‌ப்ப‌ட்ட‌ வ‌லை)எனும் அர்த்த‌ங்க‌ளைக் கொண்டிருக்கின்ற‌ன‌. பிரிட்ட‌னில் உள்ள‌ 'ச‌வுத்தாம்த‌ன் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தைச் சார்ந்த‌ தொல்பொருளாராய்ச்சிக் குழுவில் அட‌ங்கிய‌ பேராசிரிய‌ர் டீ.பீகோக்கு ம‌ற்றும் முனைவ‌ர் எல்.புளூ ஆகியோர், அண்மையில் எகிப்திலுள்ள‌ க‌சீர் அல் க‌டீம் எனும் ப‌ழமைவாய்ந்த‌ இட‌த்தில் அக‌ழ்வாராய்ச்சிப் ப‌ணிக‌ளில் ஈடுப‌ட்டிருக்கும்பொழுது, ப‌ழ‌ங்கால‌ எழுத்துக்க‌ள் பொறிக்க‌ப்ப‌ட்ட‌ உடைந்த‌ சாடியைக் க‌ண்டெடுத்துள்ள‌ன‌ர்.


இல‌ண்ட‌னில் அமைந்துள்ள‌ பிரிட்டிசு அருங்காட்சிய‌க‌த்தில் ப‌ழ‌ங்கால‌ பானை,க‌ல‌ன்க‌ள் குறித்த‌ ஆராய்ச்சியில் நிபுண‌த்துவ‌ம் வாய்ந்த‌ முனைவ‌ர் ரோபேர்த்தா தோம்பேரு, க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ இவ்வுடைந்த‌ சாடி இந்தியாவில் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌தென்றும், இச்சாடி கொல்க‌ல‌ன் வ‌கையைச் சார்ந்த‌து என‌வும் அடையாள‌ம் க‌ண்டுபிடித்துள்ளார்.

தொல்லிய‌ல் நிபுண‌ரான‌ ஐராவ‌த‌ம் ம‌காதேவ‌ன், க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ சாடியில் பொறிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ எழுத்துக‌ள் கி.மு ஒன்றாம் நூற்றாண்டின் த‌மிழ் பிராமி லிபி வ‌கையை சார்ந்த‌வை என‌ அறுதியிட்டுக் கூறுகிறார். இக்கூற்றிற்கான‌ ஆதார‌ங்க‌ளை திர‌ட்டுவ‌தில் அவ‌ர், பாண்டிச்சேரியில் அமைந்துள்ள‌ பிரென்சு க‌ல்வி க‌‌ழ‌க‌த்தில் ப‌ணியாற்றும் மொழியிய‌ல் நிபுண‌ரான‌ பேராசிரிய‌ர் சுப்ப‌ராயுலு, புதுச்சேரியில் அமைந்துள்ள‌ ம‌த்திய‌ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் ப‌ணியாற்றும் பேராசிரிய‌ர் கே.இராச‌ன், ம‌ற்றும் த‌ஞ்சாவூர் த‌மிழ்ப் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தின் பேராசிரிய‌ர் வீ.செல்வ‌குமார் போன்றோரின் நிபுண‌த்துவ‌ங்க‌ளை உத‌வியாக‌ப் பெற்றுள்ளார்.

அக‌ழ்வாராய்ச்சியில் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ சாடியில் பொறிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ எழுத்துகள் 'பானை ஒரி' என‌ ஒலிப்ப‌தாக‌வும்,'ஒரி' எனும் சொல் த‌மிழில் 'உரி' (க‌யிற்றில் நெய்ய‌ப்ப‌ட்ட‌ வ‌லை) என அழைக்க‌ப்ப‌டுவ‌தாக‌வும், அது ம‌ருவி 'ஒரி' என‌ ப‌ர்சி எனும் ம‌த்திய‌ திராவிட‌ மொழியில் இன்று வ‌ழ‌க்கில் இருப்ப‌தாக‌வும் திரு.ம‌காதேவ‌ன் தெரிவித்தார். த‌ற்கால‌த்தில் க‌ன்ன‌ட‌ மொழியில்'ஒட்டி' என‌ புழ‌ங்கிவ‌ரும் சொல் 'ஒர்ரி' எனும் சொல்லின் ம‌ருவ‌லாக‌ இருக்க‌க் கூடும் என‌ அவ‌ர் தெரிவித்தார்.

க‌சீர் அல் க‌டீமில் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ சாடியில் பொறிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ த‌மிழ் பிராமி எழுத்துக்க‌ளை 'ஒர்ரி' என‌வும் வாசிக்க‌லாம், ஆனால் பெரும்பாலும் த‌மிழ் பிராமி லிபியை பொறுத்த‌ம‌ட்டில் ஒரே வித‌மான‌ ஒலிக‌ளை இர‌ட்டிப்புப் செய்யாது என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

இதேப் போன்ற அக‌ழ்வாராய்ச்சியொன்று க‌சீர் அல் க‌டீமில் 30 ஆண்டுக‌ளுக்கு முன்பு ந‌ட‌த்த‌ப்பெற்று, த‌மிழ் பிராமி லிபிக‌ள் பொறிக்க‌ப்ப‌ட்ட‌ கி.பி முத‌லாம் நூற்றாண்டைச் சார்ந்த‌ இர‌ண்டு சாடிக‌ள் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.

இதேப் போன்ற‌ த‌மிழ் பிராமி லிபிக‌ள் பொறிக்க‌ப்ப‌ட்ட‌ சாடிக‌ள் 1995ஆம் ஆண்டில் எகிப்தின் செங்க‌ட‌ல் க‌ரையோர‌ம் அமைந்துள்ள‌ பெரேனிக்கே எனும் ப‌ழ‌ங்கால‌ ரோமானிய‌ர்க‌ளின் குடியிருப்புப் ப‌குதியில் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ திரு.ம‌காதேவ‌ன் கூறினார்.

மேற்கத்திய‌ இல‌க்கிய‌ங்க‌ளிலும், த‌மிழ் ச‌ங்க‌ கால‌ இல‌க்கிய‌ங்க‌ளிலும் குறிப்பிட்டுள்ள‌துபோல‌ ரோமானிய‌ர்க‌ளுக்கும் த‌மிழ‌ர்க‌ளுக்கும் செங்க‌ட‌ல் வ‌ழி வ‌ணிக‌த் தொட‌ர்பான‌து நூற்றாண்டின் ஆர‌ம்ப‌க் கால‌க்க‌ட்ட‌த்திலேயே கொடிக்க‌ட்டி ப‌ற‌ந்த‌தை இத்த‌கு க‌ண்டுபிடிப்புக‌ள் ஆதார‌ப்பூர்வ‌மாக‌ நிரூபித்துள்ள‌ன‌.

'திரைக‌ட‌ல் ஓடியும் திர‌விய‌ம் தேடு' என்று சும்மாக‌வா கூறினார்க‌ள் ந‌ம் முன்னோர்க‌ள்.. வெறும் வெற்றிலையை வாயில் போட்டு மென்று, திண்ணையில் வேலை வெட்டி இல்லாம‌ல் அம‌ர்ந்துக் கொண்டு கூறிய‌ ப‌ழ‌மொழிய‌ல்ல‌ இது. அனுப‌வ‌ப்பூர்வ‌மாக‌வே சாதித்துக் காட்டியிருக்கிறார்க‌ள் ந‌ம் முன்னோர்க‌ள்.

வாழ்க‌ த‌மிழ‌ர்.. வ‌ள‌ர்க‌ அவ‌ர்த‌ம் மாண்பு..!

Tuesday, May 8, 2012

கடல்கொண்ட குமரிக்கண்டம் ...............part 1

கடல்கொண்ட குமரிக்கண்டம் பற்றி சிலப்பதிகாரம் போன்ற பழந்தமிழ் நூல்களில் அறியமுடிகின்றது. இதுவே லெமூரியாக்கண்டம் என்று கூறப்பட்டாலும் லெமூரியாக்கண்டம் காணப்பட்ட இடம் பற்றி இன்றும் வரலாற்றாய்வாளர்கள் மத்தியில் சர்ச்சை நீடிக்கிறது. 3000 வருடங்க...ளுக்கு முன்பு இன்றைய இலங்கை, இந்தியா. மடகஸ்கார். அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து குமரிக்கண்டம் காணப்பட்டதாகக்கூறப்படுகிறது. அடுத்தடுத்து ஏற்பட்ட பாரிய கடற்கோள்களால் இது கடலில் மூழ்கிவிட்டது என அறியமுடிகிறது, கந்தபுராணம் குறிப்பிடும் சூரபதுமனின் மகேந்திரபுரி, இராவணனின் தென்னிலங்கை போன்ற புராண-இதிகாசக்குறிப்புக்கள் மூலம் குமரிக்கண்டம் இருந்ததும் கடற்கோளால் அழிந்ததும் உண்மையே என்ற முடிவுக்கு வரமுடியும். இப்பெருநிலப்பரப்பில் தமிழர்கள் சங்கம் வைத்து தமிழ் ஆய்ந்தார்களாம். குமரிக்கண்டத்தின் எஞ்சிய நிலப்பரப்புகளில் ஒன்றான ஈழத்தில், குமரிக்கண்டத்து ஆதி மக்களே வாழ்ந்திருந்தார்கள்-வாழ்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. மாறிமாறி வந்த கடற்கோள்களினால் குமரிக்கண்டத்தைச் சேர்ந்த ஏழ் தெங்கநாடு , ஏழ் குன்ற நாடு, ஏழ் முன்பாலை நாடு, ஏழ் பின்பாலை நாடு, ஏழ் மதுரை நாடு, ஏழ் குணக்கரை நாடு, ஏழ் குறும்பனை நாடு முதலான 49 நாடுகளும் மறைந்தன என ஆய்வாளர் கூறுவர். இவற்றுள் குமரியாறும், பஃறுளியாறும், பேராறும், குமரிக்கோடும்(குமரி மலை) மகேந்திர மலையும் அடங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.இப் பரந்த தமிழ் நாட்டில் வழக்கிலிருந்த 4 தமிழ் வேதங்களும் மகேந்திரமலையில் உருவானவை எனவும் பிற்காலப்பார்ப்பனர்களால் அவை அழித்தொழிக்கப்பட்டு வடநாட்டு 4 ஆரிய வேதங்கள் அவ்விடத்தில் அமர்த்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இங்கே ஓர் ஓவியரின் கற்பனையில் குமரிக்கண்டம்…..!

இராமாயண கால சிதைவுகள் video
கடல்கொண்ட குமரிக்கண்டம் ...............part 2

Monday, May 7, 2012

எகிப்தில் தமிழ்........part 1

எகிப்தில், அண்மையில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட, கி.மு. 1ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த மட்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டதாக ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது. (21 நவம்பர் 2007 இந்து இதழ்). அந்நாளில் மிசிரம் என்றழைக்கப்பட்ட எகிப்துடன் தமிழகம், சங்ககாலம் முதலே வாணிபத்தொடர்புகளைப்பேணியதுஎன்பதை முன்பே சுட்டிக்காட்டியிருந்தோம். “பானை” “ஒரி” ஆகிய தமிழ்ச்சொற்கள் அதில் பொறிக்கப்பட்டிருந்ததாக அறியமுடிகிறது. 2000 வருடங்களுக்கு முன்பே தமிழன் கடல் கடந்து மேலைநாடு வரை சென்றிருக்கிறான். அந்த நாளையும் இந்த(இன்றைய) நாளையும் கொஞ்சம் ஒப்பிட்டுப்பாருங்கள்:(



தொடரும் ...............
எகிப்தில் தமிழ்........part 2

Sunday, May 6, 2012

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு…!

தமிழன் கடல்கடந்து கொடி கட்டி ஆண்ட வரலாற்றுக்கு ஒரு ஆதாரம் சீனநாட்டிலும் உள்ளது……..!!!

சீனாவிலுள்ள “சூவன்சவு”, பண்டைக்காலத்தில் துறைமுகமாக விளங்கிய நகரமாகும். பழங்காலந் தொட்டே, இந்நகருக்கும் தமிழருக்கும் வாணிபத் தொடர்புகள் காணப்பட்டிருக்கின்றன.

கி.பி 1260இல், சீனாவில் ஆட்சிபீடமேறிய “குப்லாய்கான்” என்ற மங்கோலியச் சக்கரவர்த்தியால் இங்கு சிவன்கோவிலொன்று கட்டப்பட்டிருக்கிறது. இவனே பீஜிங் நகரை அமைத்தவனாவான். அக்காலத் தமிழகத்தில் புகழ்பெற்று விளங்கிய இரண்டாம் பாண்டியப் பேரரசுடன் இம்மன்னன் நட்புரீதியான தொடர்புகளைப் பேணியதாக வரலாற்றுக் குறிப்புகள் உண்டு.

இம்மன்னனின் ஆணைப்படி “தவச்சக்கரவர்த்திகள் சம்மந்தப் பெருமாள்” என்ற தமிழனால் “திருக்காதலீச்சரம்” எனப்படும் இச்சிவாலயம் அமைக்கப்பட்டதாக அங்கு ஒரு தமிழ் கல்வெட்டே வைக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டின் இறுதிவரிகள் சீனமொழியில் அமைக்கப்பட்டுள்ளமை அதன் சிறப்பம்சமாகும்....

இன்னும் தேடுகிரன் தேடி முடியல வெயிட் பண்ணுங்க :) ....................

Saturday, May 5, 2012

இரசிய அதிபர் மாளிகையில் தமிழ்!


தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நாம் நிறைய சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு தமிழ் பேச்சும் எழுத்தும் நம்மை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரசிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் (Kremlin Palace) பெயரை அவர்கள் அழகு தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரசியத்திலும், இரண்டாவதாக அண்டைநாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.

தமிழைவிட எத்தனையோ உலகமொழிகள் பெரும்பாலான மக்களால் பேசபடுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் காரணம் , தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக உள்ளது.

"உலகில் ஆறு மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், சமற்கிருதம். இந்த ஆறு மொழிகளில் நான்குமொழிகள் இன்று வழக்கில் இல்லை.

இலக்கிய, வரலாற்று செழுமையான மொழி. எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக "தமிழ் மொழி "தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை" என தமிழில் எழுதினோம்" என்று கூறுகிறார்கள்.

வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கூட நம் தமிழின் பெருமை தெரிந்து உள்ளது. ஆனால் நாமோ'தமிழில் எழுதுங்கள் என்பதற்கு ஒரு கருத்தரங்கம் நடத்திக்கொண்டு இருக்கிறோம்'.

சிந்தியுங்கள்........தமிழர்களே......"

நன்றி: http://www.secretofindia.com/page/11/

Friday, May 4, 2012

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!

சூரியன், சந்திரன் முதலாம் கோள்களும் நட்சத்திரங்களும் பூமியைச் சுற்றி வருகின்றன என்ற நம்பிக்கை எத்தனையோ நூற்றாண்டுகளாக மக்களை ஆட்டிப்படைத்துவந்தது!

சூரியன் புவியைச் சுற்றி வரவில்லை; புவியே சூரியனைச் சுற்றி வருகிறது என்று கண்டுபிடித்தவர் யார்???
நிக்கலசு கொப்பணிக்கசு??
சத்தியமாக இல்லை…
பெயர் தெரியாவிட்டாலும் அடித்துச் சொல்லலாம்…
தமிழன் தானென்று!!!

எப்படி?

கி.மு 3ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி 2ஆம் நூற்றாண்டுக்குமிடையில் பாடப்பட்டவையான சங்க இலக்கியங்களில் ஒன்று “பட்டினப்பாலை”. “கடியலூர் உருத்திரங்கண்ணனார்” என்ற புலவரால் பாடப்பட்டது. இதில் வரும் 67 – 72 வரையான வரிகள் தான் மேற்கூறிய நம் ஊகத்துக்கு சான்றளிக்கின்றன:

“நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோண்மீன் போல,
மலர் தலை மன்றத்தும் பலருடன் குழீகிக்,
கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப்,
பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ,
திருஞ்செருவின் இகன்மொய்ம்பினோர்”

இதன் பொருள் இதுதான்…
“சூரியனை சுற்றி வரும் கோள்களைப் போல இந்த வீரனை அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். ஆனால் இந்த வீரன் ஒருவனே அனைவரையும் சமாளிக்கின்றான்”

இலக்கியத்தைப் பொறுத்தவரை, உவமைக்கு பயன்படும் பொருள் ஏற்கனவே மக்களால் அறியப்பட்டதாகத் தான் இருக்கும்.

உதாரணமாக, “மதி போன்ற முகம்” என்ற உவமையைக் கவனித்தவுடன் நாம் முதலில் சந்திரனையே எண்ணுகிறோம்; பின்பு அதை குறிப்பிட்ட முகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். எப்போதும் உவமை என்பது, ஏற்கனவே அறிந்த ஒன்றுடன், தெரியாததை ஒப்பிட வைத்து குறிப்பிட்ட விடயத்தை எமக்கு இலகுவாகப் புரியவைக்கிறது.

இங்கோ, எதிரிகள் சூழ்ந்த மாவீரன் என்பதே, கோள்கள் சூழ்ந்த சூரியன் என்று தான் உவமிக்கப்படுகின்றது என்பது அக்காலத் தமிழர், ஞாயிறையே ஏனைய கோள்கள் சுற்றிவருகின்றன என்ற உண்மையை அறிந்திருந்தார்கள் என்பதற்கு சான்றாக இல்லையா???

எவ்வளவு பெரிய அறிவியல் உண்மையை, இந்தப் பழந்தமிழ் இலக்கியம், சர்வசாதாரணமாக, அதேவேளை மிகுந்த அடக்கத்துடன் சொல்கிறது??

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!

1,2,3…. எண்களைத்தவிர தமிழிலும் எண்கள் உண்டென்பது பலரும் அறியாத விடயம்! :( :(

நாம் வழக்கமாக இன்று பயன்படுத்தும் 1,2,3…. எண்களைத்தவிர தமிழிலும் எண்கள் உண்டென்பது பலரும் அறியாத விடயம்! அவை:-
௦ - 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9

இன்றைய எண்கள், இந்தியாவிலிருந்து அரேபிய நாட்டு வர்த்தகர்கள் மூலம் மேலைத்தேயங்களுக்கு பரவியமையால், இந்து-அராபிய எண்கள் எனப்பெயர் பெற்றன. இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலிருந்தே இவ்வெண்கள் அரேபியரிடம் சென்றடைந்திருக்கின்றது என அறுதியிட்டுக்கூறமுடியும். இந்தியாவின் ஏனைய பாகங்களை விட, சங்ககாலத்திலிருந்தே (கி.மு 3ஆம் நூற். – கி.பி. 1ஆம் நூற். வரை) அரேபியா, யவனம்(கிரேக்கம்), மிசிரம்(எகிப்து), பாரசீகம் போன்ற நாடுகளுடன் வர்த்தகத்தொடர்புகளைப்பேணியது தமிழ் நாடு என்பதும் நோக்கற்பாலது. மேலுள்ள படம் தமிழ் எண்களிலிருந்து இன்றைய எண்கள் எவ்வாறு முகிழ்த்தன என்பதைக்காட்டி நிற்கிறது. மொரீசியஸ் நாட்டில் மட்டுமே இத்தமிழெண்கள் (நாணயத்தாளில்) இன்றும் புழக்கத்திலுள்ளன என்பது உபரித்தகவல். —

தொடரும் ...............