Pages

Thursday, November 8, 2012

ஐசக் நியூட்டன்

hi friends .......... என்னைக் கவர்ந்த கதைகள் மற்றும் மனிதர்களின் வாழ்க்கை தொகுப்பை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.அதற்கு இது முதல் படி .....இன்று முதல் என்நைக் கவர்ந்த மற்றும் என் சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு என கருதுகிறேன் ....
இங்கிலாந்த் நாட்டில் 1642 ஆம் வருடம் .அந்த வருடம் இங்கிலாந்திற்கு மட்டும் அல்ல உலகத்திற்கே ஒரு புனித வருடம் .ஆம் அதே ஆண்டில் டிசம்பர் 25 ஆம் நாள் பிறந்த ஒரு அறிவியல் மேதையின் பிறப்பு அந்த வருடத்தை புனித படுத்தியது .அவர் தான் "father of modern physics" ஐசக் நியூட்டன். அவரை பற்றிய முழு குறிப்பு களையும் நான் பகிர வில்லை.எதோ என் அறிவுக்கு எட்டிய சில குறிப்புகளை இங்கு உங்கள் முன் பகிர ஆசை படுகிறேன்.
"என்ன இது இவன் புதிதாக சிந்தனைகள் கருத்துகள் என உளறுகிறான் என என்ன வேண்டாம் .எவ்வளவு நாள் தான் வீட்டில் வேலை வெட்டி இல்லாமல் இருப்பது .பொழுது போகவில்லை அதன் விளைவு தான் இந்த தீடிர் சிந்தனை" ........
என்ன தான் ஐசக் நியூட்டன்"father of modern physics" என்று போற்ற பட்டாலும் ,சிறு வயதில் அவருக்கும் கல்விக்கும் மிக தூரம் ஆம் அவருக்கு படிப்பில் ஆர்வம் இல்லை.அவருடைய ஆர்வம் எல்லாம் புதிது புதிதாக சிந்தனை செய்வதும் விளையாட்டு கருவிகளை உருவாக்குவதில் மட்டுமே இருந்தது..... இயற்கையில் நமக்கு சாதரணமாக தோன்றும் நிகழ்ச்சிகள் யாவும் அவருக்கு மட்டும் அறிவு ஆராய்சிக்கு ஏற்ற வினாக்கள் ஆக தோன்றியது .அதுவே அவரை பிற்காலத்தில் மிக பெரிய மேதையாகவும் மாற்றியது . அதற்கு உதாரனமாக நான் படித்த ஒரு குறிப்பை இங்கு வைக்கிறேன்.
அது ஒரு விடுமுறை நாள்...நியூட்டன் மைதானத்தில் தன் நண்பர்களோடு விளையாடி கொண்டு இருந்தார்.அப்போது தீடிர் என்று காற்று வேகமாக வீச தொடங்கியது ..உடனே அவர் காற்றின் வேகத்தை அறிந்து கொள்ள ஆவல் கொண்டார். கண்ணனுக்கு தெரியாத காற்றின் வேகத்தை எப்படி அளப்பது என்ற கேள்வி முதலில் அவர் மனதில் தோன்றினாலும்.காற்றின் வேகத்தை எப்படியாவது அளக்க வேண்டும் என்கிற அவருடைய ஆர்வத்தின் விளைவு அவருக்கு அது எட்டா கனியாக தோன்றவில்லை.
ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு அவருக்கு ஒரு எளிய வழி தோன்றியது. முதலில் காற்று அடிக்கும் திசையில் குதித்து பார்த்தார்.பின்னர் காற்று அடிக்கும் எதிர் திசையில் குதித்து பார்த்தார்.அதே போன்று காற்றே அடிக்காத மற்றொரு நாளில் அதே சோதனையை மறுபடியும் செய்து பார்த்தார்.இது போன்று வெவ்வேறு காற்றின் வேகத்தின் நிலைகளில் அவர் தாவிய தூரத்தை அளந்து பார்த்தார்,தாவிய தூரத்தின் அளவு வெவ்வேறாக இருந்தது .இதில் கண்ட வேற்றுமைகளை ஒப்பிட்டார் .சில கணிப்புகளை கணித்து பார்த்தார் .காற்றின் வேகத்தை கணக்காக கூறினார் .
இது போன்ற இயற்கையின் ரகசியங்களை ஆராய்வதில் அவர் தன் முழு நேர சிந்தனையை செலவிட்டார் .ஆனால் படிப்பிலோ எந்த வித நாட்டமும் இல்லை. இந்நிலையில் நியூட்டனின் 14 வயதில் அவருடைய குடும்ப நிலையின் காரணத்தால் அன்னையின் கட்டளையின் பேரில் படிப்பை கைவிட்ட அவர், அவருடைய பண்ணையில் ஆடு மாடுகளை பராமரித்து வந்தார்.இருந்த போதும் இயற்கையின் மீது இருந்த அவரின் காதல் குறையவில்லை.அவரின் ஆர்வம் அனைத்தும் புதிய ஆராய்ச்சியிலும் நிறைய புத்தகம் படிப்பதில் மட்டுமே இருந்தது .இதனைக் கண்ட அவரின் அன்னை அவரை மீண்டும் பள்ளியில் சேர்த்து விட்டார் .
பின்னர் 1661இல் cambridge கல்லூரியில் தனது மேற் படிப்பை தொடர்ந்தார்.கல்லூரியில் சேர்ந்த பிறகு தனது தனி திறமையை வெளிக்கொணர்ந்தார் .நிறைய ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதினார்.பின்னர் ஒரு ஓய்வு நாளில் தன் பண்ணையில் இருந்த போது தோன்றியதுதான் "newton's theory of gravity" அவராலேயே ஆப்பிள் கனி அறிவியல் வரலாற்றில் அழியா புகழ் பெற்றது . நியூட்டன் அதன் பிறகு பல பல அறிவியல் விதிகளை உலகிற்கு வித்திட்டார் . அவரின் ஆர்வமும் விடா முயற்சியும்,அவரின் அளவு கடந்த இயற்கையின் மேல் இருந்த ஆர்வமே அவரை மிக பெரிய அறிவியல் மேதை ஆக்கியது .
"நமக்கு மிகவும் பிடித்தமான விசயத்தில் நமது ஆர்வத்தை செலுத்தினால் ஒரு நாள் புகழ் பெறுவோம்.புகழ் பெறாவிட்டாலும் நமக்கு பிடித்த விசயத்தில் நமது மனதை செலுத்தும் போது மன நிறைவேனும் கிடைக்கும்.அது நாம் தேர்ந்தெடுக்கும் கல்வியாக இருந்தாலும் சரி வேலையாக இருந்தாலும் சரி....... உங்கள் ஆர்வத்திற்கு அணை போடாதிர்கள்.ஆர்வம் ஒன்று மட்டுமே நம் புதிய ஆக்கத்திற்கு வழி. இவை நியூட்டனின் பொன்மொழிகள்".அதை நாமும் பின்பற்றினால் நாமும் ஒரு நாள் புகழ் பெறுவோம் என்று கூறி இதோடு இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.