எவ்வளவு கடினமாக இருந்தாலும் தன்மேல் நம்பிக்கை வைத்து சுயமுடிவுகளை எடுப்பவர்களே வெற்றியாளர்களாக உருவாக முடியும். தெரியாத புதிர்களுக்கு அந்தந்த துறையை சார்ந்தவர்களிடம் ஆலோசனை கேட்டுக்கொள்ளலாம் அதில் ஒன்றும் தவறில்லை, உங்கள் திறமையை வளர்ப்பதற்கு ஜோசியர்கள் வழிகாட்ட மாட்டார்கள், நம் முன்னோர்கள்தான் ஜோதிடத்தை நம்பி அந்த இயல்பை நமக்கு கொடுத்துவிட்டு போனார்கள் நாமாவது நம்மை நம்பி நம் சந்நதிகளை தன்னம்பிக்கை யின் இயல்பில் வளரச்செய்வோம்.
தனக்கு பலமாக தானே இருக்கும் போது எதற்கு வேறுயாரையோ ஒட்டிக்கொள்ள வேண்டும், பிறர் துணை இருந்தாலும் இல்லாமல் போனாலும் எந்த தடையுமில்லாமல் நம் வேலைகளை நாமே செய்து கொள்ள முடியாதா? தெரியாததை பிறரிடம் கேட்கலாம் ஆனால் முழு பொறுப்பையும் அவரிடம் ஏன் ஒப்படைக்க வேணாண்டும், நம்மை சுற்றியிருப்பவர்களெல்லாம் நமக்கு உதவியார்கள்தான், நாமும் நம் சுற்றத்தார்களுக்கு உதவியாளர்தான் அதர்காக வீணாபோன யாரோ ஒருவரை சார்ந்திருந்து அவர் காட்டும் வழியில் நம் வாழ்க்கையை விட்டுவிட்டால் பின்பு நம் வாழ்க்கை எங்கே காணோமே என்று தேடிக்கொண்டு திரியவேண்டியதுதான்.
பிறர் நம்மை பாராட்ட வேண்டுமென்று கூட எதிர்பார்க்க வேண்டாம். தகுதியில்லையென்றாலும் பாராட்டுக்களை கேட்டுக்கொண்டிருந்தால்தான் சிலருக்கு புதுவேகம் வரும். பாராட்டுகளை எதிர்பார்பதால்தான் இந்த வேகம் வருகிறது, யாரும் பாராட்டவில்லையென்றால் மனம் உறங்கிக் கொண்டுதான் இருக்கும். பாராட்டுதலை எதிர்பாராதவனின் மனம் தூங்குவதில்லை அவனை தூற்றினாலும், போற்றினாலும், உற்சாகமாகவே காணப்படுவான், தூக்கமருந்து சாப்பிடுகிறவன் தொடர்ந்து சாப்பிட்டால்தான் நல்ல தூக்கத்தை காண்பான் அதை நிறுத்தி விட்டால், தூக்கமும் நின்று விடும். அது போலதான் பாராட்டுதலை நிறுத்தி விட்டால் உற்சாகமும் நின்று விடுகிறது. எனவே பாராட்டுதலை எதிர்பார்க்காதீர்கள். தூக்க மருந்தை படிப்படியாக குறைப்பதை போல பிறர் பாராட்ட வேண்டுமென்ற எண்ணத்தையும் படிப்படியாக குறைத்துக் கொள்ளுங்கள்
பிறரின் வார்த்தையை, பிறரின் பொருளை சார்ந்திராமல் நமக்கு நாமே ஊன்றுகோலாக நிற்பதுதான் தன்னுறுதி கொண்ட மனதின் அடையாளமாகும். பலர் சேர்ந்து சாதிக்க முடியாததை சிலர் தனியாக நின்று சாதித்து விடுவார்கள், மனதை பிறரில் சாய்க்காமல் தனியாக விடும் போதுதான் அதன் வலிமை வெளிப்படும். உறுதியான மனம் உள்ளவர்களுக்கு உலகில் வேறு என்ன வேண்டும், யாரை தாங்கி பிடிக்க வேண்டும் எனவே, மனதை உறுதியாக வைத்திருங்கள், எப்போதும் உங்களை சார்ந்திருங்கள், உங்களை உங்கள் வசமே விட்டபின் இனி யாருக்கு வேண்டும் உதவி.

No comments:
Post a Comment